Blogger Widgets

Wednesday, June 20, 2012

முஜாஹித் மவ்

சகோதரர் முஜாஹித் அவர்களுக்கு ஓர் மனந்திறந்த மடல்.

சகோ:முஜாஹித் அவர்களுக்கு…….
السلام عليكم ورحمة الله وبركاته
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் S.LT.J சம்பந்தமாகவும் உங்களுடைய விஷயம் சம்பந்தமாகவும் கூறிய கருத்துக்களுக்கு பதிலாக தாங்கள் எழுதிய கடிதம் இலங்கையைச் சேர்ந்த மௌலவி ஒருவர் முலம் மின்னஞ்சல் வழியாக எனக்குக் கிடைத்தது.அந்தக் கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கின்ற விஷயங்கள் அனைத்தும் உண்மைதானா? என்பதைப் பற்றி அலசுவதற்காகத்தான் இந்த கடிதத்தைத் தங்களுக்கு நான் எழுதுகிறேன்.
இதுவரை இலங்கையில் T.N.T.J கிளையாக இயங்கி வந்த S.LT.J என்ற அமைப்பை கலைத்து விட்டதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக தவ்ஹீத் ஜமாத்தின் அதிகாரப்பூர்வ இனையத்தலமான tntj.net ல் அன்மையில் ஒரு பகிரங்க அறிவிப்பு விடப்பட்டது.
 அதில் :
 இலங்கை S.LT.J நிர்வாகம் மாநில தலைமையால் கலைப்பு.
 கலைக்கப்பட்டது ஏன்?
தொடர்ந்து இலங்கையில் நடைபெற்றுவரும் தவ்ஹீத் பிரச்சாரங்கள். புகைப்படங்களுடன் செய்தி..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அங்கமாக இலங்கையில்; செயல்பட்டு வந்த S.LT.J வில் பிரச்சாரம் செய்து வந்த மௌலவி முஜாஹித் என்பவர் TNTJ வின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களை S.LT.J யில் பிரச்சாரம் செய்து வந்தது S.LT.J யின் தலைவராக இருந்த வஸ்னி அவர்கள் முன்னிலையில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. எந்த நபரும் TNTJ விற்கு எதிரான கருத்துகளை கூறக் கூடாது என்று நாம் கூறவில்லை.
மாறாக TNTJ விற்கு எதிரான கருத்துக்களை கூறக்கூடியவர்கள் அது தொடர்பான விஷயங்களை TNTJ மௌலவிகளுடன் அமர்ந்து விவாதித்து விட்டு தங்களது கருத்தை நிலைநாட்டிவிட்டுத்தான் அது தொடர்பான கருத்துக்களை வெளியில் சொல்ல வேண்டும். அது தான் சரியான வழிமுறை என்பதையும் மௌலவி முஜாஹித் அவர்கள் எந்ததெந்த விஷயத்தில் TNTJ வுடன் முரண்படுகிறாரோ அந்தப் பட்டியலை உடனடியாக முஜாஹித் அவர்களிடம் வாங்கி அனுப்புவதோடு அது குறித்த பகிரங்க விவாதத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் S.LT.J தலைவர் வஸ்னி அவர்களிடம் மாநில தலைமை தெரிவித்தது.
ஆனால் இதை கேட்டுவிட்டுச் சென்ற S.LT.J நிர்வாகம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநில நிர்வாகத்தின் கோரிக்கையை அலட்சியபடுத்தியது மட்டுமல்லாமல் இரண்டு மாதங்கள் கழித்து முஜாஹித் என்பவர் S.LT.J விற்கு மட்டும் பிரச்சாரகரில்லை அவரது பிரச்சாரத்தை S.LT.J வோ அல்லது TNTJ வோ கட்டுப்படுத்தாது என்கிற ரீதியில் முஜாஹித் எழுதிய கடிதத்தை அனுப்பியதோடுஇ நாம் கேட்ட முரண்பாடான விஷங்களின் பட்டியலை பெற்றுத் தராமல் TNTJ வை கடுமையாக விமர்சிக்கும் மௌலவி முஜாஹித் அவர்களை தொடர்ச்சியாக பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதால் இந்த பிரச்சனையை சரி செய்ய மாநிலத் தலைமை கடந்த 27-2-2009 அன்று நமது பிரதிநிதிகளாக மௌலவி எஸ்.எஸ்.யு சைபுல்லாஹ் காஜா,அப்பாஸ் அலி அவர்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தது.
தற்போது S.LT.J விற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எவ்வித உறவும் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மியத்துத் தவ்ஹீத் – இலங்கை (T.N.T.J) என்ற பெயரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அங்கீகாரம் பெற்ற கிளை இலங்கையில் அமைக்கப்பட்டது.
என்று மேற்கண்டவாரு T.N.T.J தெரிவித்திருந்தது.
இந்தச் செய்திகளை அலசுவதற்கு முற்பட்ட நீங்கள்.
முதலாவதாக T.N.T.J வின் கொள்கைகள் என்ற தலைப்பில்
T.N.T.J யின் கொள்கைகள்.
நான் டிஎன்டீஜே யிலோ அதன் கிளையென இலங்கையில் கருதப்பட்ட S.LT.J யிலோ அல்லது வேறு எந்த இஸ்லாமிய நிருவனங்களிலோ அங்கத்துவம் பெற்றவனாகவே ஊதியம் பெறும் அழைப்பாளனாகவோ இல்லை ஆதலால் எந்த இயக்கத்தினது நிர்வாகக் கொள்கையும் என்னை கட்டுப்படுத்தாது.இது சம்பந்தமான டீஎன்டீஜே யினரின் கடிதம் எஸ்எல்டீஜே யிற்கு வந்தடைந்தபோது ஒரு விளக்கக் கடிதத்தை என்னிடத்தில் கோரினர்.அதற்கா நான் எழுதிய பதில் கடிதத்தை தளத்தில் பின்வரும் இணைப்பில் வெளியிட்டுள்ளேன்.
மேற்கண்ட தகவலைக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
அதில் தாங்கள் T.N.T.J யிலோ அதன் கிளையென இலங்கையில் கருதப்பட்ட S.LT.J யிலோ அல்லது வேறு எந்த இஸ்லாமிய நிருவனங்களிலோ அங்கத்துவம் பெற்றவனாகவே ஊதியம் பெறும் அழைப்பாளனாகவோ இல்லை ஆதலால் எந்த இயக்கத்தினது நிர்வாகக் கொள்கையும் என்னை கட்டுப்படுத்தாது.எனக் குறிப்பிட்டுள்ளீர்கள் தாங்கள் பயான் செய்வதற்கு ஊதியம் வாங்கவில்லை என்று வைத்துக் கொண்டாலும் S.LT.J யின் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றுகிறீர்களே?
ஒரு குறிப்பிட்ட நிருவணத்தின் கல்லூரியில் பொருப்பில் இருந்து விட்டு அந்நிருவணத்தின் எந்தக் கொள்கையும் என்னைக் கட்டுப் படுத்தாது எனக் கூறுவதை அறிவுப் பூர்வமானதாக தாங்கள் கருதுகிறீர்களா?
இது நியாயமான பதிலா?
அப்படியானால் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் அந்நிருவணத்தின் கொள்கைப்படி அவர்கள் உங்களிடம் எதுவும் கேட்ட முடியாது அப்படித்தானே?
அதற்கடுத்ததாக
இஸ்லாத்தின் அடிப்படைகளோடு எவ்வாறு முரண்படுகிறேன்!!!!!!
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு நான் முரண்படுவதாக அவர்கள் மூடலாக என்ன விடயங்கள் என்று விளக்காமல் வெளியிட்டுள்ளார்கள்.வஸ்னிக்கு முன்னால் நிரூபித்ததாகவும் சொல்லியுள்ளார்கள்.அடிப்படைக் கொள்கைகளுக்கு எவ்வாறு முரண்படுகிறேன் என்பதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.மாறாக பொத்தாம் பொதுவாக அடிப்படைக் கொள்கைகளுக்கு முரண்படுகிறேன் என்று சொல்வது மிகப் பெரிய தவறு.
மூடலாக இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரண் என்று எவ்வாறு சொல்வார்கள்.முடிந்தால் ஆதாரங்களை முன்வைக்கட்டும்.இது போன்ற எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கு T.N.T.J யிற்கு உகந்ததல்ல.
என்று எழுதியுள்ளீர்கள்.
சகோதரர் வஸ்னி அவர்களுடன் சகோதரர் பி.ஜெ அவர்கள் பேசிய ஆடியோவிலேயே அதனைத் தெரிவித்துள்ளார் மட்டுமன்றி அவைகளை நிருபிப்பதாகவும் கூறி முஜாஹித் T.N.T.Jயுடன் எந்தெந்தக் கருத்தில் முரன் படுகிறார் என்ற பட்டியலையும் தரச் சொல்லுங்கள் எனக் குறிப்பிட்டார்.ஆனால் அதைத் தாங்கள் கொடுத்து விவாதிப்பதற்குப் பதிலாக நான் அவர்களிடம் ஊதியம் பெறவில்லை அங்கத்தவர் இல்லை என்ற பதிலைத்தான் கொடுத்துள்ளீர்கள்.
அத்துடன் இன்ஷா அல்லாஹ் குறிப்பிட்ட அந்த ஆடியோவை இணையத்தள வாசகர்கள் உண்மையை அறிந்து கொள்வதற்காக மிக விரைவில் இணையத்தளத்தில் பதிவு செய்கிறேன் என்பதையும் மிக அன்பாய்த் தங்களுக்கு அறியத் தருகிறேன்.
அப்போது தாங்கள் அடிப்படைக் கொள்கைக்கு முரண் படுவதை சகோ: பி.ஜெ அவர்கள் சொன்னார்களா? இல்லையா?என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.
அடுத்ததாக:
பி.ஜெ அவர்களின் சூனியம் பற்றிய நிலைப்பாட்டைப் பற்றி கீழ்கண்ட தகவல்களைச் சொல்லியுள்ளீர்கள்.
அதில் :
சூனியம் பற்றிய மௌலவி பீ.ஜே அவர்களின் நிலைப்பாடு
சூனியம் செய்வதும் சூனியம் அவிழ்ப்பதும் சூனியம் கற்பதும் கற்பிப்பதும் இறை நிராகரிப்பாகும் என்பது குர்ஆனும் ஹதீஸ{ம் தெளிவாக எமக்குச் சொல்கிறது. இதில் முரண்படுபவன் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது. இதில் எனக்கோ மௌலவி பீ.ஜே அவர்களுக்கு எந்த முரண்பாடும் கிடையாது.
ஆனாலும் சூனியம் என்பது வெறும் வித்தைதான். அதனால் எந்தப் பாதிப்பும் செய்யமுடியாது என்ற தனிப்பட்ட கருத்தை மௌலவி பீ.ஜே அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.இந்த விடயத்தில் அவர்களுடைய முடிவு தவறானது.அவ்வாறு சொன்னால் ஏராளமான அல்குர்ஆன் வசனங்களுக்கு வலிந்துரை செய்ய வேண்டி ஏற்படும்.சில ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டி ஏற்படும்.அது இப்பொழுது ஏற்பட்டுவிட்டது.சூனியம் பற்றிய மௌலவி பீ.ஜே யின் நிலைப்பாடு தவறானது என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் இருந்தாலும் பின்வரும் செய்தியே ஹதீஸ்கள் மார்க்க ஆதாரமாகும் என நம்புபவர்களுக்குப் போதுமானதாகும்.விரிவான விளக்கங்களைக் காண விரும்புவோர் அது சம்பந்தமாக சூனியம், ஜின், கண்ணேறு என்ற தலைப்பில் நான் பேசிய 9சிடிக்களைக் கொண்ட தொடர் உரையை பார்வையிடவும்.
 صحيح البخاري – 5130 – أخبرنا عامر بن سعد عن أبيه قال : قال رسول الله صلى الله عليه و سلم ( من تصبح كل يوم سبع تمرات عجوة لم يضره في ذلك اليوم سم ولا سحر )
“”ஒவ்வொரு நாள் காலையிலும் யார் 7 அஜ்வா வகை ஈத்தம்பழங்கள் சாப்பிடுகிறாரோ அன்றைய தினம் அவரை விஷமோ சூனியமோ பாதிக்காது” என்று நபியவர்கள் கூறினார்கள்.(புகாரி:5130)
என்று எழுதியுள்ளீர்கள்.
முதலில் பி.ஜெ அவர்கள் சூனியத்தினால் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்த முடியாது(அது உண்மைதான்) என்று சொன்னதற்காக எந்த ஹதீஸ்களையும் மறுக்கவில்லை மாறாக அவர் மறுக்கக் கூடிய ஹதீஸ்களுக்கு அவர் சொல்லும் காரணம் அவைகள் அல்குர்ஆனுக்கு முரன்படுகிறது என்பதாகும்.
குர்ஆனுக்கு ஹதீஸ்கள் முரன்படும் என்ற கருத்தை பி.ஜெ மாத்திரம் சொல்லவுமில்லை அவர் அல்லாத எத்தனையோ இமாம்களே கூறியுள்ளார்கள்.அத்துடன் பி.ஜெ அவர்கள் எந்த ஆடியோவில் உங்களைப் பற்றி வஸ்னி நிஸாரிடம் பேசினாறோ அதே ஆடியோவில் சகோ: அப்பாஸ் அலி அவர்கள் எழுதிய ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரன்படுமா? என்ற புத்தகத்திற்கு முஜாஹித் மறுப்பெழுதத் தயாரா?என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார் ஏன் நீங்கள் அது சம்பந்தமாக ஒரு வார்த்தை கூட எழுதவில்லை? நீங்கள் சொல்லும் கருத்தில் உண்மையாளர் எனில் அதற்கும் உங்கள் இணையத் தளத்திலேயே வரிக்கு வரி பதில் தர நீங்கள் தயாரா?
அத்துடன் நீங்கள் அஜ்வா பேரீத்தம் பழம் சம்பந்தப் பட்ட ஹதிஸைக் குறிப்பிட்டு இதுவே பி.ஜெ யின் நிலைப்பாடு தவறு என்பதற்குப் போதுமானதாகும் என எழுதியுள்ளீர்கள்.
ஸிஹ்ர் என்ற வார்த்தை குர்ஆனிலும் ஹதிஸிலும் பித்தலாட்டம்,மோசடி,ஏமாற்றும் தந்திர வித்தை போன்ற பொருள்களிளேயே பயன் படுத்தப் பட்டுள்ளது.இதையும் சகோ:பி.ஜெ அவர்கள் அவருடைய திருக்குர்ஆன் மொழியாக்கத்தின் விளக்கத்தில் விரிவாக குறிப்பிட்டுத்தான் உள்ளார்.அப்படி இருக்கும் போது இந்த ஹதீஸ் எப்படி அவரது கருத்திற்கு மாற்றமானதாக அமையும்? சிந்திக்க வேண்டாமா?
ஆக ஹதீஸின் கருத்தின்படி எவர் ஒவ்வொரு நாளும் 7 அஜ்வா வகை ஈச்சப் பழங்களைச் சாப்பிடுகிறாறோ அவர் ஏமாற்றப் படவோ,மோசடி செய்யப்படவோ,பித்தலாட்டங்களுக்கு உள்ளாக்கப் படவோ மாட்டார் என்றுதானே புரிந்து கொள்ள முடியுமே தவிர சூனியம் என்றால் கை,கால்களை முடக்கிப் போட்டு விடலாம் என்றோ அல்லது ஏதாவது நோயை ஏற்படுத்தி விடலாம் என்றோ கருதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லையே?
அத்துடன் சில இமாம்களைக் குறிப்பிட்டு இவர்கள் எல்லோரும் சூனியம் உண்டு என்ற கருத்துடையவர்கள்தான் மாறாக மறுத்தவர்கள் அல்ல என்று கூற முற்படுகிறீர்கள்.
இது தான் நீங்கள் கூறும் அந்த இமாம்களும் அவர்களது கருத்துக்களும்.
1- இமாம் ஷவ்கானி அவர்கள் கூறுவதை அவதானியுங்கள் “
فتح القدير للشوكاني – (1 ஃ 151)
وقد أجمع أهل العلم على أن له تأثيراً في نفسه ، وحقيقة ثابتة ، ولم يخالف في ذلك إلا المعتزلة ، وأبو حنيفة كما تقدم
“”அபூஹனீபா, முஃதஸிலா கொள்கைப் பிரிவினர் தவிர மற்றைய மார்க்க அறிஞர்கள் அனைவரும் சூனியத்திற்கு ஒருயதார்த்தமும் தாக்கமும் உண்டு என்பதை ஏகோபித்து ஏற்றுள்ளனர்” (பத்ஹ{ல் கதீர்.1-151)
2-இமாம் குர்துபீ சொல்வதை அவதானியுங்கள்
تفسير القرطبي – (2 ஃ 46)
ذهب أهل السنة إلى أن السحر ثابت وله حقيقة.وذهب عامة المعتزلة وأبو إسحاق الاسترابادي من أصحاب الشافعي إلى أن السحر لا حقيقة له
“”ஸ{ன்னாவைப் பின்பற்றும் அறிஞர்கள்; சூனியத்திற்கு ஒருயதார்த்தமும் தாக்கமும் உண்டு என ஏற்றுள்ளனர். முஃதஸிலா கொள்கைப் பிரிவினரும் ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த இஸ்த்ராபாதீ என்பவரும் இதனை மறுக்கின்றனர்” (குர்துபீ.2-46)
இது போன்று ஸ{ன்னா வழிவந்த அறிஞர்களான இமாம் மாலிக்;, ஷாபிஈ, அஹ்மத், புகாரி, இப்னு தைமியா, இப்னுல் கையிம், தஹபீ, இப்னு கஸீர், ……மற்றும் நவீன காலத்தில் வாழ்ந்து மரணித்த அறிஞர்களான இப்னு பாஸ், அல்பானி, உஸைமின்………என அனைத்து அறிஞர்களும் சூனியத்திற்கு ஒருயதார்த்தமும் தாக்கமும் உண்டு என்பதை ஏற்றுள்ளனர்.
இப்படியெல்லாம் இமாம்களையும்,அவர்களுடைய கருத்துக்களையும் கூறிவிட்டு அதன்பின்னால் நீங்கள் சில செய்திகளைக் கூறுகிறீர்கள்.
அதில்:
எனது பிரச்சாரங்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளோடு மோதுகிறது என்பதற்கு எனது சூனியம் பற்றிய நிலைப்பாடுதான் காரணமாயின் இவர்களும் இஸ்லாத்தின் அடிப்படைகளோடு மோதும் வழிகேடர்களா?
என்ற கேள்வியை முன்வைத்துள்ளீர்கள்.முதலில் நீங்கள் கடிதத்தின் ஆரம்பத்திலிருந்தே சகோ:பி.ஜெ அவர்கள் சகோ: வஸ்னி அவர்களிடம் சொன்ன பல தகவல்களை இருட்டடிப்புச் செய்கிறீர்கள்.
அந்த ஆடியோவில் சகோ: பி.ஜெ அவர்கள் சூனியம் சம்பந்தப் பட்ட தாங்களின் நிவைப்பாட்டை விளக்கும் போது ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கக் கூடிய முஸ்லிமில் இடம் பெற்றிருக்கும் ஹதீஸைப் பற்றிக் கூறும் போது தான்
தாங்கள் குறிப்பிட்ட அந்த முஸ்லிமில் வரும் செய்தியை ஏற்றுக் கொள்வதாகவும், அப்படி ஏற்றுக் கொள்ளும் போது இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கே மோதுகிறீர்கள் என்பதையும் குறிப்பிடுகிறார்கள் ஆனால் நீங்களோ அதைத் தங்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டால் பல கேள்விகளை எதிர் கொள்ள வேண்டிவரும்.அப்படி வரும் போது தாங்கள் எப்படி இஸ்லாமிய அடிப்படைகளுடன் மோதுகிறீர்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதால் அதனை லாவகமாக மறைத்து விட்டீர்கள் அப்படித்தானே?
இன்ஷா அல்லாஹ் கடிதத்தின் ஆரம்பத்தில் கூறியதைப் போலவே வாசகர்கள் உண்மையை அறிய வேண்டும் என்பதற்காக அந்த ஆடியோவை மறவாமல் இணையத்தில் பதிகிறேன் என்பதை மீண்டும் தங்களிடம் கூறிக்கொள்கிறேன்.
அத்துடன் இமாம்கள் தவறு செய்தால் மாத்திரம் அதைப் பூசி மொழுவும் வேலை நமக்கு ஏன்?
தாங்கள் கொண்டிருக்கும் கொள்கையைப் போல் அந்த இமாம்களும் சூனியத்தின் முலம் கை,கால்களை முடக்கி ஒருவனை படுக்கையில் போடலாம் என்று கூறினால் அவர்களும் தவறுதான் செய்கிறார்கள்.
அத்துடன் பி.ஜெ அவர்கள் சூனியம் சம்பந்தமாக கூறும் விளக்கத்தை பிழை காண்பதற்காக நீங்கள் எடுத்துக் காட்டிய இந்த இமாம்கள் கூறுவதைப் போல் சகோ:பி.ஜெ அவர்கள் சூனியத்தினால் (நான் மேற்சொன்ன பாதிப்புகளைத் தவிற வேறு) எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று சொன்னதினால் பி.ஜெ அவர்களை முஃதஸிலா கொள்கையுடையவர் என்று தாங்கள் கூறத்தயாரா?
ஏன் எனில் நீங்களும் இப்படித்தானே அந்த இமாம்களின் பெயரைக் குறிப்பிட்டு; சூனியம் விஷயத்தில் பி.ஜெ யின் கருத்திற்கு மாற்றமாக அவர்கள் கூறியதால் இவர்களும் இஸ்லாமிய அடிப்படைகளுடன் மோதும் வழிகேடர்களா? என்று கேட்டுள்ளீர்கள்.
அப்படியானால் தாங்கள் இமாம்களைத் தூக்கிப் பிடித்து அப்படிக் கேள்வி கேட்டால் நான் கேட்பதைப் போன்ற கேள்வியும் எழும் அதனால் முதலில் தாங்கள் வைக்கும் வாதத்தை குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் தெளிவு படுத்துங்கள்………..
அடுத்ததாக தாங்கள்:
ஸஹீஹான ஹதீஸ்கள் பற்றிய மௌலவி பீ.ஜே அவர்களின் நிலைப்பாடு.
என்ற தலைப்பிட்டு சில தகவல்களைச் சொல்கிறீர்கள் அதில் முதலாவதாக,
அல்குர்ஆனைப் போன்று ஸஹீஹான ஹதீஸ்களும் மார்க்க ஆதாரமே என்பதில் எந்த ஒரு ஏகத்துவச் சகோதரனுக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அல்குர்ஆனைப் போன்று ஹதீஸ்களும் வஹீதான். ஒரு ஹதீஸ் நபியவர்களைத் தொட்டும் வந்த செய்திதான் என்பதை உறுதிப்படுத்த பின்வரும் 5 நிபந்தனைகள் தேவை. இந்த 5 நிபந்தனைகள்; மாத்திரம்தான் ஹதீஸ்கலை அறிஞர்களால் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள்.
1-அறிவிப்பாளரது நம்பகத்தன்மை.
2-அறிவிப்பாளரது கல்வித்தரம்.
3-ஒவ்வொரு மாணவரும் செய்தியை ஆசிரியரிடமிருந்து நேரடியாகக் கேட்டிருத்தல்.
4-குறிப்பிட்ட செய்தியை அறிவிக்கும் ஏனைய மாணவர்களின் அறிவிப்பிற்கு மோதும் வகையில் முரண்படாமல் இருத்தல்.
5-மறைமுகமான அறிவிப்பாளர் பலஹீனங்கள் இல்லாதிருத்தல்.
ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசை தொகுக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை எழுதப்பட்டுள்ள அனைத்து ஹதீஸ்கலை நூல்களிலும் இந்த நிபந்தனைகளையே காணலாம்.
 1-المحدث الفاصل بين الراوي والواعي
2-معرفة علوم الحديث
3-المستخرج على معرفة علوم الحديث
4-الكفاية في علم الرواية
5-الإلماع إلى معرفة أصول الرواية وتقييد السماع
6-علوم الحديث
7-التقريب والتيسير لمعرفة سنن البشير النذير
8-تدريب الراوي في شرح تقريب النواوي
9-المنهل الروي
10نظم الدرر في علم الأثر
11-فتح المغيث في شرح ألفية الحديث
12-نخبة الفكر في مصطلح أهل الأثر
13-المنظومة البيقونية
14-الباعث الحثيث
15-قواعد التحديث
இந்தத் தொடரில் ஹதீஸ்களை மார்க்க ஆதாரமாக எடுப்பதற்கு 5 நிபந்தனைகள் தேவை என்று தொடங்கி அவை எவை என்பது வரை எழுதி சில நூல்களின் பட்டியலையும் தந்துள்ளீர்கள்.அப்படித் தந்து விட்டு
மேற் சொல்லப்பட்டவைகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் எழுதப்பட்ட ஹதீஸ்கலை நூல்கள். இவைகள் எதிலும் ஒரு ஹதீஸை உறுதிப்படுத்த மேற் சொல்லப்பட்ட 5 நிபந்தனைகளையும் தவிர வேறு எந்த நிபந்தனையும் குறிப்பிடப்படவில்லை. ஒரு செய்தியை ஏற்றுக்கொள்ள இவைகளே அடிப்படையான நிபந்தனைகள். இந்த அடிப்படையிலேதான் ஒவ்வொரு ஹதீஸ்களையும் நாம் ஆய்வு செய்து வரலாறு நெடுகிலும் ஏற்று வருகிறோம். இந்த நிலைப்பாட்டில் தான் மௌலவி பீ.ஜே அவர்களும் 1980களில் ஆரம்பித்த அவரது பிரச்சாரத்தின் நெடுகிலும் செயல்பட்டார். 2000 இற்கு பிற்பட்ட பகுதியிலேயே இந்த நிலைப்பாட்டில் சிறிது மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. இன்று ஒரு ஹதீஸை ஏற்க 6வது ஒரு நிபந்தனையை அதிகரித்து -ஹதீஸின் கருத்து அல்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இல்லாதிருத்தல் – என்ற புதிய நிபந்தனையை சேர்த்து சில அறிஞர்களின் ஹதீஸ்கலை அல்லாத சில நூல்களில் காணப்படும் கருத்துக்களை எடுகோளாகக் காட்டி வலுசேர்த்து வருவதை அவதானிக்கிறோம். அந்த அறிஞர்கள் பட்டியலில் இமாம் ஷாபிஈ அவர்களையும் இடம்பெறச் செய்ததுதான் மிக வேதனை தருவதாகும்.
ஆக, ஒரு ஹதீஸ் புகாரியில் மேற்சொல்லப்பட்ட ஐந்து நிபந்தனைக்குட்பட பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் அந்த ஹதீஸை 6000 சொச்சம் அல்குர்ஆனிய வசனங்களோடும் ஒப்பிட்டு முரண்படவில்லையென்றால் தான் அது ஸஹீஹான ஹதீஸ் என நம்ப முடியும். எனவே ஸஹீஹ{ல் புகாரியை வைத்திருப்பவர்களும் ஸஹீஹ் முஸ்லிமை வைத்திருப்பவர்களும் அவைகளிலுள்ள ஹதீஸ்களில் 95 சதவீதமான ஹதீஸ்கள் ஸஹீஹானவை என சந்தோசப்பட முடியாது. -புகாரியும் முஸ்லிமும் அறிவிப்பாளர் வரிசையைத்தான் ஆய்வு செய்வார்கள் அது சரியாயின் பதிவு செய்துவிடுவார்கள் குர்ஆனோடு மோதுகிறதா இல்லையா என்று பார்க்க மாட்டார்கள் நாம்தான் அதனை ஆய்வு செய்ய வேண்டும்.- என அவரே பல இடங்களில் சொல்வதை அவதானிக்கலாம்.
இதில் மேற்சொன்ன 5 நிபந்தனைகள் தவிர எந்த நிபந்தனையும் இல்லை இதனடிப்படையில்தான் இவ்வளவு காலம் ஆய்வு செய்து ஏற்றிருக்கிறோம். 2000 திற்கு பிறகுதான் பி.ஜெ அவர்கள் அறிவிப்பாளர் தொடர் சரியான ஹதீஸ் குர்ஆனுக்கு மோதினால் அதை எடுக்கக் கூடாது என்ற நிபந்தனையை ஏற்படுத்திக் கொண்டார் என்று எழுதியுள்ளீர்கள்.
அத்துடன் ஹதீஸ் கலையில் இவ்விதி இல்லை என்றும் எழுதியுள்ளீர்கள்.ஆனால் இதற்கு மாற்றமாக ஹதீஸ் கலை அறிஞர்கள் என்னஸஹாபாக்கலே இவ்விதியை வைத்திருந்தார்களே?அதைப் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா?
அல்லது சகோ: பி.ஜெ அவாகள் தங்களைப் பற்றி பேசிய ஆடியோவில் கூறியதைப் போல் சகோ: அப்பாஸ் அலி அவர்கள் எழுதிய ஹதிஸ்கள் குர்ஆனுக்கு முறன் படுமா? என்ற புத்தகத்திற்கு வரிக்கு வரி பதில் எழுதத் தயாரா?
இமாம்கள் எழுதிய புத்தகங்களை எல்லாம் பட்டியல் போட்ட நேரத்திற்கு சூனியம் சம்பந்தமாக இருந்தாலும் குர்ஆனுக்கு முரன் படும் ஹதிஸ்கள் சம்பந்தமாக இருந்தாலும் எதைப் பற்றியானாலும் பகிரங்க விவாதத்திற்கு தயார் என விவாத அழைப்பு விடுத்திருக்களாமே? அதைச் செய்யாதது ஏன்?
சகோ: பி.ஜெ யுடன் வேண்டாம் குரைந்தது சகோ: அப்பாஸ் அலியுடனாவது விவிதிக்க பகிரங்க அழைப்பு விடுத்திருக்களாமே?
கீழே இருக்கும் செய்திகளைப் படியுங்கள். இவைகளுக்கு உங்கள் பதில் என்ன?
உமர் (ரலி) அவர்கள் கடைப்பிடித்த வழிமுறை.
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் கணவர்) அபூஅம்ர் பின் ஹப்ஸ் அவர்கள் என்னை ஒட்டுமொத்த தலாக் சொல்லி விட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார். பின்னர் அவருடைய பிரதிநிதி தோல் நீக்கப்படாத கோதுமையை எனக்கு அனுப்பி வைத்தார். அதைக் கண்டு நான் எரிச்சலடைந்தேன். அதற்கு அந்தப் பிரதிநிதி அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உனக்கு (ஜீவனாம்சம்தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை (இது ஒரு உதவியாகத் தரப்பட்டது தான்)” என்று கூறினார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், ”அவர் உனக்கு (ஜீவனாம்சம்தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (2953)
அபூஇஸ்ஹாக் அவர்கள் கூறியதாவது: நான் அஸ்வத் பின் யஸீத் அவர்களுடன் பெரிய பள்ளிவாச¬ல் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ அவர்களும் இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி¬) அவர்கள் தொடர்பான ஹதீஸை ஷஅபீ அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா பின்த் கைஸ் (ர¬லி) அவர்களுக்கு உறைவிடமும் இல்லைஜீவனாம்சமும் இல்லை என அறிவித்தார்கள்” (என்பது தான் அந்த ஹதீஸ். அங்கிருந்த) அஸ்வத் (ர¬லி) அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர் மீது எறிந்து விட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: உமக்குக் கேடு தான். இது போன்ற செய்திகளை அறிவிக்கின்றீர்களேஉமர் (ரலி¬) அவர்கள், ”ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும் நபியின் வழிமுறையையும் கைவிட மாட்டோம். ஃபாத்திமா பின் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாராஅல்லது மறந்து விட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை. மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. வ¬வும் மாண்பும் உடைய அல்லாஹ் பகிரங்கமான வெட்கக் கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளி¬ருந்து வெளியேற்றாதீர்கள் (65:1) என்று கூறியுள்ளான்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஇஸ்ஹாக் (ரஹ்)
நூல்: முஸ்லிம் (2963)
ஃபாத்திமா பின்த் கைஸ் (ர¬லி) அவர்கள் தம் கணவனால் தலாக் விடப்பட்ட போது அவர்களுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவது ஃபாத்திமா (ரலி¬) அவர்களின் கணவருக்கு கடமையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கூறியதாக சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஃபாத்திமா (ர¬லி) அவர்களே குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை கணவன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குர்ஆனில் உள்ளது; எனவே குர்ஆனிற்கு மாற்றமாக நபி (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் உமர் (ர¬லி) அவர்கள் ஃபாத்திமா (ரலி¬) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள்.
ஃபாத்திமா (ரலி¬) அவர்களின் நம்பகத்தன்மையில் உமர் அவர்கள் எள்ளவும் சந்தேகம் கொள்ளவில்லை. குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் கூற்றும் ஒருபோதும் மோதாது என்பது உறுதியான விஷயம். எனவே மறதியாக ஃபாத்திமா அவர்கள் தான் மாற்றிச் சொல்¬யிருக்க வேண்டும் என்று உமர் (ர¬லி) அவர்கள் கூறினார்கள்.
இந்த சம்பவத்தில் உமர் (ர¬லி) அவர்கள் என்ன வாதத்தை முன்வைத்தாரோ அதைத் தான் நாமும் கூறிக் கொண்டிருக்கிறோம். இப்போது ஹதீஸின் போ¬ப் பாதுகாவலர்கள் நம்மை விமர்சனம் செய்ததைப் போல் ‘உமர் ஹதீஸை மறுத்து விட்டார்; அவர் குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்பவர்களுக்குக் குறிப்பெடுத்துக் கொடுத்து விட்டார்; இவர் வழிகெட்ட கூட்டத்தைச் சார்ந்தவர்’ என்றெல்லாம் விமர்சனம் செய்வார்களா?
அறிவுச் சுடர் ஆயிஷா (ரலி) அவர்களின் வழிமுறை.
உமர் (ர¬லி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்ட போது அவர்களிடம் ”சகோதரரே! நண்பரே!” எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி¬) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ர¬லி) அவர்கள் ”ஸுஹைபே! எனக்காகவா நீங்கள் அழுகிறீர்கள்? ‘இறந்தவருக்காக அவரது குடும்பத்தார் அழும் சில அழுகையின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லவா?” என்றார்கள்.
உமர் (ரலி¬) அவர்கள் இறந்த போது (அவர்கள் இறப்பதற்கு முன் கூறிய) அந்தச் செய்தியை நான் ஆயிஷா (ரலி¬) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ர¬லி) அவர்கள், ”அல்லாஹ் உமர் (ர¬லி) அவர்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! (எவரோ) ஒருவர் அழுவதின் காரணமாக இறை நம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளர்களுக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான் என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொல்¬ விட்டு, ”அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான். அழவும் வைக்கிறான் (53:43); ஒருவரின் சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார் (35:18) (என்று கூறும்) குர்ஆனே உங்களுக்குப் போதும்” என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (1694)
உர்வா பின் அஸ்ஸுபைர் அவர்கள் கூறியதாவது: இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி¬) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ர¬லி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி¬) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவேயில்லை) இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறியபெரிய பாவத்தின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தாரோ இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்” என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இ(ப்னு உமர் அறிவிருத்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால் (குறைஷித் தலைவர்களான) இணை வைப்பாளர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கருகே நின்று கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்க) நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார்.
நான் அவர்களுக்குச் சொல்¬ வந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்று சொல்லவில்லை). பிறகு (இறந்தவர்கள் நாம் பேசுவதை செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ர¬லி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்.
(நபியே) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது (27:80)
(நபியே) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியுறச் செய்ய முடியாது (35:22)
அறிவிப்பவர்: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரலி¬)
நூல்: முஸ்லி¬ம் (1697)
உமர் (ரலி¬) மற்றும் இப்னு உமர் (ர¬லி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ர¬)லி அவர்களுக்கு எட்டிய போது, ”பொய்யர்களாகவோ பொய்ப்பிக்கப் பட்டவர்களாகவோ இல்லாத இருவர் சொன்ன ஹதீஸை நீங்கள் என்னிடம் கூறுகிறீர்கள். செவி (சில நேரங்களில்) தவறாக விளங்கி விடுகிறதுஎன்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: காசிம் பின் முஹம்மத் (ரஹ்)
நூல்: முஸ்லி¬ம் (1693)
உமர் (ரலி¬) அவர்களும், அவர்களுடைய மகன் இப்னு உமர் அவர்களும் பிரபலமான நபித் தோழர்கள். குடும்பத்தினர் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இவர்கள் கூறும் ஹதீஸ் ஒருவரது பாவச் சுமையை மற்றவர் சுமக்க முடியாது என்று கூறும் குர்ஆனிற்கு மாற்றமாக இருப்பதால் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மாறாக நல்ல மனிதர்களான இந்த இருவரிடத்தில் தான் தவறு வந்திருக்கும் என ஆயிஷா (ர¬) அவர்கள் முடிவு செய்கிறார்கள்.
மேலும் குர்ஆனிற்கு முரண்பாடாக அவர்கள் அறிவித்த செய்திக்கு முரண்படாத வகையில் விளக்கமும் கொடுக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் ஆயிரக்கணக்கான பொன்மொழிகளைச் சமுதாயத்திற்கு வழங்கிய ஆயிஷா (ரலி¬) அவர்கள் இந்தக் கருத்தைக் கூறியதற்காக ”அவர்கள் ஹதீஸை மறுத்து விட்டார்கள்” என்று இவர்கள் சொல்ல முன்வருவார்களா?
இதே கோணத்தில் ஆயிஷா (ரலி¬) அவர்கள் இன்னொரு ஹதீஸையும் அணுகியுள்ளார்கள்.
இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ர¬லி) அவர்களிடம் வந்து சகுனம் என்பது பெண்கால்நடைவீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அவர்கள் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழும் பார்த்து விட்டு, ‘அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக! இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக அறியாமைக் கால மக்கள் சகுனம் என்பது பெண்கால்நடைவீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள்” என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்¬ விட்டு இந்தப் பூமியிலோஉங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது” (57:22) என்ற வசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹஸ்ஸான் (ரஹ்),நூல்: அஹ்மத் (24894)
ஆயிஷா (ரலி¬) அவர்கள் மறுத்த இந்தச் செய்தி புகாரியில் 2858, 5093, 5753, 5772 ஆகிய எண்களிலும் முஸ்லி¬மில் 4127, 4128 ஆகிய எண்களிலும் இடம் பெற்றுள்ளது.
யாருக்கு எப்போது துன்பம் வரும் என்பதை அல்லாஹ் முடிவு செய்து விட்டான். அல்லாஹ் நாடினால் தான் துன்பம் ஏற்படும் என்று குர்ஆன் கூறுகிறது. வீடுபெண்கால்நடை இவற்றினாலும் துன்பம் வரும்எனவே இம்மூன்றிலும் சகுனம் பார்க்கலாம்” என்று அபூஹுரைரா அறிவித்த ஹதீஸ் கூறுகிறது. இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்பதால் இதை நபி (ஸல்) கூறவில்லை என்பதே ஆயிஷா (ரலி¬) அவர்களின் வாதம்.
இந்த மூன்று செய்திகளிலும் ஆயிஷா (ர¬லி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பெயரால் சொல்லப்பட்ட செய்தி தவறு என்பதைக் குர்ஆனுடைய வசனங்களை மேற்கொள் காட்டி விளக்கியுள்ளார்கள்.
ஆயிஷா (ரலி¬) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் மேற்சொன்ன செய்திகளை மறுத்துள்ளதால் தான் நாமும் இந்தச் செய்திகளை மறுக்கிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அதை நபியவர்கள் சொல்-யிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அந்த ஹதீஸை ஏற்கக்கூடாது என்று நாம் கூறும் அடிப்படையில் நபித் தோழர்களும் செயல்பட்டுள்ளார்கள் என்பதற்காகத் தான் இந்தச் செய்திகளைக் கூறியுள்ளோம்.
அடுத்ததாக இமாம்கள் சொல்வதைக் கேளுங்கள்.
ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?
குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூôது என்று நாம் மட்டும் கூறவில்லை. நம்மை விட ஹதீஸ் துறையில் பல மடங்கு அனுபவம் பெற்ற பெரும் பெரும் அறிஞர்கள் நமக்கு முன்பாகவே இவ்விதியை கூறியுள்ளார்கள்.
இமாம் ஷாஃபியின் கூற்று
ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா?” என்று ஷாஃபி இமாமிடத்தில் வினவப்பட்டது. இதற்கு இமாம் ஷாஃபி பதிலளிக்கையில், ”கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும்” என்று கூறினார்கள்.
நூல்: அல்மஹ்சூல், பாகம்: 4, பக்கம்: 438
இமாம் குர்துபீயின் கூற்று.
ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்தக் கூடாது.
நூல்: தஃப்சீருல் குர்துபீ, பாகம்: 12, பக்கம்: 213
இமாம் ஜுர்ஜானியின் கூற்று.
ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதில் மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.
நூல்: அத்தஃரீஃபாத், பாகம்: 1, பக்கம்: 113
இமாம் சுயூத்தியின் கூற்று .
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று: விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவுக்கு அச்செய்தி மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.
நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 276
முஹம்மது பின் அப்தில்லாஹ்வின் கூற்று.
இந்த அறிஞரின் கூற்றை இமாம் இப்னு ஹஸ்லிம் அவர்கள் அல் இஹ்காம் என்ற தன்னுடைய நூ¬ல் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்.
முஹம்மது பின் அப்தில்லாஹ் கூறுகிறார்: ஹதீஸ் மூன்று வகையாகும்.
1. குர்ஆனுக்கு ஒத்து அமைகின்ற ஹதீஸ். இதை ஏற்றுக் கொள்வது கட்டாயம்.
2. குர்ஆனில் இருப்பதை விட கூடுதலான தகவலைத் தருகின்ற ஹதீஸ். இதையும் குர்ஆனுடன் இணைத்து ஏற்றுக் கொள்வது கட்டாயம்.
3. குர்ஆனுடைய கருத்திற்கு முரணாக வரும் ஹதீஸ். இது ஒதுக்கப்பட வேண்டியது.
நூல்: அல்இஹ்காம், பாகம்: 2, பக்கம்: 209
விதியை செயல்படுத்திய மேதைகள்
குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை ஏற்கலாகாது என்ற இந்த விதி அறிஞர்களின் ஏடுகளில் எழுத்தளவில் மட்டும் உள்ளதல்ல! அறிவிப்பாளர் தொடரை அலசிப் பார்த்து ஹதீஸின் தரத்தை முடிவு செய்யும் இந்த அறிவு ஜீவிகள், சரியான அறிவிப்பாளர் தொடரில் குர்ஆனுக்கு மாற்றமான கருத்துக்களைக் கொண்ட ஹதீஸ்களை ஏற்க மறுத்துள்ளார்கள்.
புகாரி, முஸ்லிம் போன்ற சிறந்த நூற்களில் ஹதீஸ் இடம் பெற்றிருந்தாலும் செய்தியில் குர்ஆனுக்கு மாற்றமான கருத்து வருகின்ற போது அறிவிப்பாளர் தொடரை இந்த நியாயவான்கள் பொருட்படுத்தவில்லை. பின்வரும் தகவல்கள் இதைத் தெளிவாக உணர்த்துகிறது.
 இமாம் இஸ்மாயீலீ அணுகிய முறை.
ஸஹீஹுல் புகாரிக்கு ‘முஸ்தக்ரஜ்’ எனப்படும் ஹதீஸ் தொகுப்பு நூலைத் தொகுத்தவர் இஸ்மாயீலீ என்ற அறிஞர் ஆவார்.
புகாரியில் விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்குப் பதில் தரும் போது இந்த அறிஞரின் கூற்றை இப்னு ஹஜர் எடுத்துக் காட்டாமல் இருந்ததில்லை. இப்படிப்பட்ட அறிஞர் நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கும் ஒரு ஹதீஸை, அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத, புகாரியில் இடம் பெற்ற ஒரு ஹதீஸை எப்படிக் குறை காண்கிறார் என்று பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸரைமறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும்புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், ”நான் உங்களிடம் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?” என்று கேட்பார்கள்.
அதற்கு அவர்களின் தந்தை இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்” என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையி¬ருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெது (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது?” என்று கேட்பார்கள்.
அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம் நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன்” என்று பதிலளிப்பான்.
பிறகு இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள்” என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்பு¬ ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர¬லி)
நூல்: புகாரி 3350
இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கொடுக்கையில் பின்வருமாறு இஸ்மாயீலீ அவர்களின் கூற்றைப் பதிவு செய்கிறார்.
இஸ்மாயீலீ அவர்கள் இந்த ஹதீஸின் கருத்தில் சிக்கல் இருப்பதாகக் கருதி இதனுடைய நம்பகத் தன்மையில் குறை கூறியுள்ளார். அவர் இந்த ஹதீஸைப் பதிவு செய்து விட்டு (பின்வருமாறு) கூறுகிறார்:
அல்லாஹ் வாக்கு மீற மாட்டான் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் திட்டமாக அறிந்திருந்தார்கள். இதை அவர்கள் விளங்கியிருக்கும் போது தமது தந்தைக்கு ஏற்பட்டதைத் தமக்கு ஏற்பட்ட இழிவாக அவர்கள் எப்படிக் கருதியிருப்பார்கள்என்று இஸ்மாயீலீ கூறியுள்ளார்.
இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியதுதந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே! அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதி¬ருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர். சகிப்புத் தன்மை உள்ளவர்‘ என்ற இந்த இறைவனுடைய வெளிப்படையான கூற்றுக்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்று இஸ்மாயீலீ மட்டுமின்றி மற்றவர்களும் விமர்சித்துள்ளார்கள்.
நூல்: ஃபத்ஹுல்பாரீ, பாகம்: 8, பக்கம்: 500
மேற்கண்ட ஹதீஸை அறிஞர்கள் விமர்சிக்கும் போது அதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி அவர்கள் பேச்சையே எடுக்கவில்லை. மாறாக, அல்லாஹ் வாக்கு மீறுவான் என்று இப்ராஹீம் நபி எண்ணுவது இறைத் தூதரின் தன்மைக்கு மாற்றமானது என்பதால் இது ஆட்சேபணைக்குரியது என்கின்றனர்.
மேலும் ‘தமது தந்தை அல்லாஹ்வின் எதிரி என்று தெளிவானவுடன் இப்ராஹீம் தம் தந்தையிடமிருந்து விலகிக் கொண்டார்’ என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸ் ‘அவர்கள் விலகவில்லை; மறுமையிலும் தமது தந்தைக்காக வாதாடுவார்கள்’ என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. எனவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்ற அதே அடிப்படையில் இந்த அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
சொல்கின்ற கருத்து நியாயமானதா? என்று சிந்திக்காமல் எந்த இமாமாவது நீங்கள் கூறுவதைப் போன்று கூறியுள்ளாரா? என்று குருட்டுத்தனமாகக் கேட்பவர்கள் இந்த அறிஞர்களின் கூற்றுக்களை உற்று நோக்க வேண்டும்.
இமாம் இப்னு தய்மியாவின் வழிமுறை
இப்னு தய்மியா அவர்கள் அனைவராலும் போற்றப்படும் மிகச் சிறந்த அறிஞர். இந்த அறிஞர், ‘குர்ஆனுக்கு முரண்பட்டால் ஹதீஸை ஏற்கக் கூடாது’ என்ற அடிப்படையில் நின்று, நம்மையெல்லாம் மிஞ்சுகின்ற வகையில் ஹதீஸ்களை விமர்சனம் செய்துள்ளார்.
1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்துக் கூறினார்கள்: கண்ணியமும்,மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். பூமியிலே ஞாயிற்றுக்கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான். புதன்கிழமை ஒளியைப் படைத்தான். வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களைப் பரவச் செய்தான். வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இரவுக்கு மத்தியில் கடைசிப் படைப்பாக ஆதமைப் படைத்தான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி¬)
நூல்: முஸ்லிம் 4997
படைப்பதை சனிக்கிழமையி¬ருந்து துவங்கி வெள்ளிக்கிழமையில் முடித்திருந்தால் திட்டமாக இவ்வுலகம் ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாகி விடும். இக்கருத்து குர்ஆனுக்கு மாற்றமானதாகும். ஹதீஸ் கலையில் நுன்னறிவுள்ளவர்கள் இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸில் குறை உள்ளதென நிரூபித்துள்ளார்கள்.
நூல்: மஜ்மூஉ ஃபதாவா இப்னி தய்மியா, பாகம்: 4, பக்கம்: 34
வானம் மற்றும் பூமி ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாக திருக்குர்ஆன் சொல்லும் போது, ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எனவே இது ஒரு குறை. இது அல்லாமல் அறிவிப்பாளர் தொடரிலும் குறை உள்ளது என்பதே இப்னு தய்மியா அவர்களுடைய கூற்றின் சாராம்சம்.
இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸ் குறை காணப்பட்டுள்ளது என்று இப்னு தய்மியா கூறியிருப்பது இதுவும் குறை கூறுவதற்குரிய ஒரு வழி முறை தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இஸ்மாயீலீ மற்றும் இப்னு தய்மியாவைப் போன்று இன்னும் பல அறிஞர்கள் குர்ஆனுடன் முரண்படுவதைக் காரணமாகக் கூறி பல செய்திகளை மறுத்துள்ளார்கள்.
கருத்தைக் கவனித்து நிராகரிக்கப்பட்டவை.
எத்தனையோ அறிவிப்பாளர் தொடர்களைப் பற்றி ‘சரியானவை’ என்று அறிஞர்கள் தீர்ப்பு வழங்கி விட்டு, செய்தியில் உள்ள குறையினால் அதை ஏற்க மறுத்துள்ளார்கள். இந்த விதியைப் பல இடங்களில் கையாண்டுள்ளார்கள்.
இமாம் தஹபீ.
இஸ்மாயீல் பின் இஸ்ஹாக் என்பவர் கூறுகிறார்:
அஹமது பின் ஹம்பல் அவர்கள் (என்னிடம்), ”இந்த ஹாரிஸ் உங்களிடம் அதிகமான நேரம் இருக்கிறார். இவரை உங்கள் வீட்டிற்கு (ஒரு முறை) வரவழைத்து இவரது பேச்சைக் கேட்பதற்காக என்னை ஒரு இடத்தில் அமர வைக்கலாமே!” என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். ஹாரிஸும் அவரது மாணவர்களும் வந்து சாப்பிட்டு விட்டு இஷா தொழுதார்கள். பின்பு அவர்கள் சுமார் இரவின் பாதி வரை ஹாரிஸின் முன்பு அமைதியாக அமர்ந்தார்கள். அவர்களில் ஒருவர் கேள்வி கேட்டு ஆரம்பித்து வைத்தார். ஹாரிஸ் பேசத் தொடங்கினார். அவர்களுடைய தலையில் பறவை தங்கும் அளவிற்கு (கவனத்துடன் கேட்டார்கள்) ஹாரிஸ் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களில் சிலர் அழுது விட்டார்கள். சிலர் திடுக்கத்திற்குள்ளானார்கள். அப்போது நான் மேல் அறைக்குச் சென்று அஹ்மத் இமாமைப் பார்த்த போது அவர்கள் மயக்கமுறுகிற அளவிற்கு அழுது கொண்டிருந்தார்கள். இவர்கள் சென்ற பிறகு அஹ்மத் அவர்கள் நான் இவர்களைப் போன்று யாரையும் பார்த்தில்லை. இவரது பேச்சைப் போன்று எவரது பேச்சையும் கேட்டதில்லை” என்று கூறினார்கள்.
இமாம் தஹபீ கூறுகிறார்: இது சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்ட சம்பவம். ஆனாலும் மறுக்கப்பட வேண்டியது. எனது உள்ளம் இதை ஏற்றுக் கொள்ளாது. அஹ்மத் போன்ற (பெரிய அறிஞரிடமிருந்து) இது போன்ற நிகழ்வு ஏற்படுவதை நான் அசாத்தியமானதாகக் கருதுகிறேன்.
நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 1 பக்கம்: 430
ஹாரிஸ் என்பாரின் பேச்சில் சாதாரண மக்கள் மயங்குவதைப் போல் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்த இமாம் அஹ்மத் மயங்கினார்கள் என்று இச்சம்பவம் கூறுவதால் இதன் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அஹ்மதின் தன்மைக்கு மாற்றமாக இருப்பதால் இதை ஏற்க மாட்டேன் என்று தஹபீ கூறுகிறார்.
இமாம் அஹ்மதை விட நபி (ஸல்) அவர்கள் அந்தஸ்தில் குறைந்தவர்களா? அஹ்மது இமாமின் கண்ணியத்தைப் பாதுகாக்க அவர்களின் செய்திக்கு இந்த அளவுகோல் என்றால் உத்தமத் தூதரின் கண்ணியத்தைப் பாதுகாக்க இந்த அளவுகோலை ஏன் நாம் கையில் எடுக்கக் கூடாது?
அதே போல் நீங்கள் கேட்டிருக்கும் இன்னொரு கேள்வி :
மௌலவி“பீ.ஜேயின் இந்த தனிப்பட்ட நிலைப்பாடு இமாம் புகாரியையும் முஸ்லிமையும் அவர்களின் -நபியவர்கள் பற்றிய நம்பகமான ஆதாரப்பூர்வமான செய்திகளை மாத்தரம் பதிவு செய்வோம்- என்ற நிலைப்பாட்டையும் பெறுமதியிழக்கச் செய்வதைப் பார்க்கிறோம்.
-ஹதீஸின் கருத்து அல்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இல்லாதிருத்தல் – என்ற நிபந்தனை சரியான நிபந்தனையாயின் அல்குர்ஆனை மனனமிட்டிருந்த, தங்களது இரண்டு நூல்களிலும் தப்ஸீர் என்ற பாடத்தையிட்டு அதன் கீழ் அல்குர்ஆனிற்கு விரிவுரை வழங்கும் ஹதீஸ்களை சேர்த்துக் கொண்ட இந்த இரண்டு அறிஞர்களும் -விளக்கம் அளிக்க முடியாத வகையில் அல்குர்ஆனோடு மோதுகின்ற- எந்தச் செய்தியையும் தங்களது நூல்களில் சேர்த்திருக்க மாட்டார்கள். குறிப்பாக இமாம் புகாரி தனது நூலான ஸஹீஹ{ல் புகாரியில் பதிவு செய்யும் ஹதீஸ்களுக்கு எல்லா அறிஞர்களை விடவும் கூடுதலான நிபந்தனையிட்டவர். இந்த நிபந்தனையை வேறு எந்த நூல்களிற்கும் அவரிடவில்லை.
இதில் நீங்கள் வைக்கும் முதலாவது வாதம்
இமாம் புஹாரி,முஸ்லிம் ஆகிய இருவரும் எப்படிப் பட்ட இமாம்கள்?நபிகளாரின் சரியான ஹதீஸ்களை மட்டும்தான் நாங்கள் பதிவு செய்வோம் என்று சொல்லி,ஸஹீஹான ஹதீஸ்களை மட்டுமே பதிவு செய்தவர்கள்.அத்துடன் புஹாரி அவர்கள் மற்ற எல்லா அறிஞர்களை விடவும் அதிகமான நிபந்தனைகளை வைத்தவர்.புஹாரி,முஸ்லிம் ஆகிய இருவரும் அவர்களது புத்தகத்திலேயே தப்ஸீர் என்ற பகுதியைச் சேர்த்து குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமாக வரும் ஹதீஸ்களை இணைத்தார்கள்.
இப்படிப் பட்ட இமாம்கள் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு மோதும் போது அவைகளை நிராகரிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்திருந்தால் குர்ஆனோடு மோதுகின்ற எந்தச் செய்தியையும் அதில் சேர்த்திருக்க மாட்டார்கள் எனக் கூறுகிறீர்கள்.
முதலில் புஹாரி,முஸ்லிம் அந்த நிபந்தனையை வைத்தால்த்தான் நாமும் வைக்க வேண்டும் என்ற நிபந்தனை ஹதீஸ்கலையில் எங்காவது இருக்கிறதா?
மீறி புஹாரி,முஸ்லிம் வைக்காத ஒரு நிபந்தனையை ஒரு அறிஞர் வைக்கிறார் அது குர்ஆன் ஹதீஸிற்கு ஏற்றதாக இருக்கிறது அதை ஏற்றுக் கொள்வது அறிவுடமையா? அல்லது புஹாரி,முஸ்லிம் சொல்லாததைச் சொல்லிவிட்டார் என அதை மறுப்பது அறிவுடமையா?
அடுத்ததாக நீங்கள் கேட்கும் கேள்வி இது தான் :
இமாம் ஷாபிஈ சொல்வதை அவதானியுங்கள்
“الأم للشافعي – (7 ஃ 304)
وقال الله عزوجل (والسارق والسارقة فاقطعوا أيديهما) وقال عز ذكره (الزانية والزانى فاجلدوا كل واحد منهما مائة جلدة) فلو صرنا إلى ظاهر القرآن قطعنا من لزمه اسم سرقة وضربنا كل من لزمه اسم زنا مائة جلدة ولما قطع النبي في ربع دينار ولو يقطع في أقل منه ورجم الحرين الثيبين ولم يجلدهما استدللنا على أن الله عزوجل إنما أراد بالقطع والجلد بعض السراق دون بعض وبعض الزناة دون بعض ومثل هذا لا يخالفه المسح على الخفين قال الله عزوجل (إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برءوسكم وأرجلكم إلى الكعبين) فلما مسح النبي صلى الله عليه وسلم على الخفين استدللنا على أن فرض الله عزوجل غسل القدمين إنما هو على بعض المتوضئين دون بعض وأن المسح لمن أدخل رجليه في الخفين بكمال الطهارة استدلالا بسنة رسول الله صلى الله عليه وسلم لانه لا يمسح والفرض عليه غسل القدم كما لا يدرأ القطع عن بعض السراق وجلد المائة عن بعض الزناة والفرض عليه أن يجلد ويقطع فإن ذهب ذاهب إلى أنه قد يروى عن بعض أصحاب النبي صلى الله عليه وسلم أنه قال سبق الكتاب المسح على الخفين فالمائدة نزلت قبل المسح المثبت بالحجاز في غزاة تبوك والمائدة قبله فإن زعم أنه كان فرض وضوء قبل الوضوء الذى مسح فيه رسول الله صلى الله عليه وسلم وفرض وضوء بعده فنسخ المسح فليأتنا بفرض وضوأين في القرآن فإن لا نعلم فرض الوضوء إلا واحدا وإن زعم أنه مسح قبل يفرض عليه الوضوء فقد زعم أن الصلاة بلا وضوء ولا نعلمها كانت قط إلا بوضوء فأى كتاب سبق المسح على الخفين المسح كما وصفنا من الاستدلال بسنة رسول الله صلى الله عليه وسلم كما كان جميع ما سن رسول الله صلى الله عليه وسلم من فرائض الله تبارك وتعالى مثل ما وصفنا من السارق والزانى وغيرهما (قال الشافعي) ولا تكون سنة أبدا تخالف القرآن، والله تعالى الموفق.
“-திருடர்களுடைய கையை அல்குர்ஆன் வெட்டச் சொல்கிறது. இது எல்லாத் திருட்டையும் குறிக்கிறது. இதனடிப்படையில் செயல்படுவோமாயின் அனைத்துத் திருடர்களுடைய கையையும் வெட்ட வேண்டும். ஆனால் நபியவர்கள் கால் தீனாரிற்குக் குறைவான பெறுமதியுள்ளதைத் திருடியவரின் கையை வெட்டக் கூடாது என்று சொன்னார்கள். எனவே அல்லாஹ் சில திருடர்களை இதன் மூலம் நாடவில்லை எனக் கூறுகிறோம்.
விபச்சாரம் செய்தவர்களுக்கு கசையடி அடியுங்கள் என்று குர்ஆன் சொல்கிறது. இது விபச்சாரம் செய்த அனைவரையும் குறிக்கிறது. ஆனால் திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தபோது நபியவர்கள் கசையடி அடிக்கவில்லை. கல்லெறிந்து கொண்றார்கள். இதன் மூலம் அல்லாஹ் விபச்சாரம் செய்யும் எல்லோரையும் நாடவில்லை எனக் கூறுகிறோம்.
வுழூவின்போது கால்களைக் கழுவுமாறு அல்லாஹ் சொல்கிறான். ஆனால் காலணியின் மீது நபியவர்கள் சில பொழுதுகளில் மஸ்ஹ் செய்தார்கள்.எனவே இதன் மூலம் வுழூச் செய்யும் எல்லோரையும் அல்லாஹ் நாடவில்லை எனக் கூறுகிறோம்……………………ஒரு காலமும் குர்ஆனுக்கு முரண்படும் ஒரு ஸ{ன்னா இருக்கவே முடியாது.
இவ்வளவு தெளிவாக ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாது என்று சொன்ன ஒரு அறிஞரை முரண்படும் என்று சொல்பவர் என்று சொல்கிறார்களே நிரூபிப்பார்களா!!!!!
முதலில்
இவ்வளவு இமாம்கள் குர்ஆனுக்கு ஹதீஸ் முரன் பட்டால் அதை ஏற்கக் கூடாது எனக் கூறியிருக்க அவர்களை எல்லாம் விட்டு விட்டு இமாம் ஷாபி அவர்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்ததுதான் மிக வேதனை தருவதாக எழுதியுள்ளீர்கள் அப்படியெனில் மற்ற இமாம்கள் விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?
அவர்கள் விஷயத்தில் உங்களுக்கு கவலை இல்லையா?
அவர்கள் சொன்ன கருத்தை ஏற்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா?
ஸஹாபாக்கள் சொன்னவைகளுக்கு உங்கள் பதில் என்ன? எழுதத் தயாரா?
அது போல் இமாம் ஷாபியின் மேற்கண்ட செய்தியை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.
அதில்:
இமாம் ஷாபி அவர்கள் ஒரு காலமும் குர்ஆனுக்கு முரன் படும் ஒரு ஸ_ன்னா கூட இருக்க முடியாது என்று கூறியிருப்பதைக் காட்டி பார்த்தீர்களா? ஷாபி இமாம் அவர்களே குர்ஆனுக்கு ஹதீஸ் முரன் படாது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால் இவர்களோ ஷாபி இமாமையும் அவர்களின் பட்டியலில் சேர்த்து விட்டார்கள்.என எழுதியுள்ளீர்கள்.
முதலில் நீங்கள் சகோ : பி.ஜெ அவர்கள் என்ன கருத்தைச் சொல்கிறார் என்பதைச் சரியாகப் புரியாததால் வந்த விளைவுதான் இது.
இன்று நீங்கள் எடுத்துக் காட்டிய இமாம் ஷாபியின் செய்தி எதைச் சொல்கிறதோ அதைத்தானே பி.ஜெ அவர்களும் இது வரைக்கும் சொல்கிறார்.
இமாம் ஷாபி அவர்கள் ஒரு காலமும் குர்ஆனுக்கு முரன் படும் ஒரு ஸ_ன்னா கூட இருக்க முடியாது என்கிறார்.அதே நேரம் சகோ: பி.ஜெ அவர்கள்குர்ஆனுக்கு முரன் பட்டால் அது ஸ_ன்னாவாக இருக்கவே முடியாது என்கிறார்.
இந்த இரண்டு வாதத்திற்கும் என்ன வித்தியாசம் ஒன்றுமில்லையே இதில் என்ன குழப்பம் உங்களுக்கு?
நீங்கள் எடுத்துக் காட்டிய இமாம் ஷாபி அவர்களின் கூற்று பி.ஜெ உங்களுக்கு காட்ட வேண்டியது அதை நீங்களே எடுத்துக் காட்டி பி.ஜெ யின் கருத்துக்குத்தான் ஆதாரம் தந்துள்ளீர்கள்.
அத்துடன் இவ்வளவு தெளிவாகச் சொன்ன இமாம் ஷாபியை குர்ஆனுக்கு முரன் படும் என சொன்ன அறிஞர்களின் பட்டியலில் சேர்த்துள்ளார்கள். நிருபிக்கத் தயாரா? என்று கேட்டுள்ளீர்கள்.ஏன் சகோ : அப்பாஸ் அவர்கள் அவரது புத்தகத்திலும் இமாம் ஷாபி அவர்களின் கருத்தைக் குறிப்பிட்டுத்தானே எழுதினார்.அதைப் பார்க்கவில்லையா? அல்லது பார்த்ததையே மறைக்கிறீர்களா?
இதோ இமாம் ஷாபி சொல்வதைக் கேளுங்கள்.
إذا تكاملت شروط صحته هل يجب عرضه على الكتاب
قال الشافعي رضي الله عنه لا يجب لأنه لا تتكامل شروطه إلا وهو غير مخالف للكتاب
ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா?” என்று ஷாஃபி இமாமிடத்தில் வினவப்பட்டது. இதற்கு இமாம் ஷாஃபி பதிலளிக்கையில், ”கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும்” என்று கூறினார்கள்.
 நூல்: அல்மஹ்சூல், பாகம்: 4, பக்கம்: 438
இப்படியெல்லாம் இமாம் ஷாபி அவர்கள் கூறியிருக்க இதை மறைப்பதில் தங்களுக்கு என்ன இன்பம் இருக்கிறது?
அத்துடன் இருதியாக சில செய்திகளைக் கூறியுள்ளீர்கள் அதில்….
என்னைப்பற்றி மௌலவி பீ.ஜே அவர்கள் செய்துள்ள தனிப்பட்ட விமர்சனங்கள்
தாராளமாக ஏராளமாக மோசமாக கேட்டதையெல்லாம் மௌலவி பீ.ஜே அவர்கள் என்னைப்பற்றி பேசியுள்ளார்.
 இவர் ஒரு ஷைத்தான் இவரை சந்திக்க எனக்கு விருப்பமில்லை
-உலக பித்னாவில் இவர் முதலானவர்
-அந்த மாதிரி நடிப்பார்
-இந்தியாவிற்கு வந்து பித்னா பண்னும் வேலையைத்தான் பார்த்தார்.
-இவருக்கு க்ரவ்ட் வருதுன்னு சொல்லி அவரை எஸ்எல்டிஜேயில் வைத்திருக்கிறீர்கள். சம்மாங்கோட் பள்ளியிலும்தான் க்ரவ்ட் வருகிறது. அப்போ அவங்க சொல்றது உண்மையாகிறுமா!!
-என்னைப் பற்றி நிறைய அவதூறு சொல்லியுள்ளார்.
-என்னைய மனசுல டாக்கட்டாக வைத்துக் கொண்டு செயல்படுகிறார்.
………………………………………………………………………………………………………………………………………………………………
இப்படியெல்லாம் எழுதியுள்ளீர்கள் இதில் எது உண்மைஎது பொய்பி.ஜெ சொன்னவைகளை எதற்காக சொன்னார் போன்ற அனைத்தையும் இன்ஷா அல்லாஹ் நான் இணையத்தளத்தில் பதிவு செய்யும் பி.ஜெ மற்றும் வஸ்னி ஆகியோரது உறையாடல் பற்றிய ஆடியோவில் வாசகர்கள் புறிந்து கொள்வார்கள்.
அத்துடன் தங்களைப் பற்றி சகோ: பி.ஜெ அவர்கள் சொன்ன செய்திகள் உண்மை என்று எனக்குத் தெரிந்ததால்த் தான் இவைகளை தாங்களுக்கு அழகாகத் தெளிவு படுத்த எண்ணி எழுதியுள்ளேன். இது தவிற பல செய்திகள் உங்களைப் பற்றி எனக்குத் தெரிந்தாளும் அவைகளை நாகரீகம் கருதி தவிர்த்திருக்கிறேன்.தாங்கள் இந்தியாவிற்கு வந்த நேரத்தில் இங்கு படிக்கின்ற மாணவர்களிடத்தில் எஸ்எல்டிஜே பற்றி என்ன சொன்னீர்கள்? அப்படியெல்லாம் சொன்ன பிறகும் தாங்கள் ஏன் இன்னும் எஸ்எல்டிஜேயில் நிலைக்கிறீர்கள் போன்றவற்றையும்,அதுவல்லாத பல விஷயங்களையும் தனிப்பட்ட முறையில் உங்களிடத்திலும்,தேவைப்படின் வாசகர்களிடத்திலும் தெரிவிப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்…..