Blogger Widgets

Wednesday, June 20, 2012

ரிஸ்வான் மதனி

சாக்கடையில் முத்துக் குளிப்பவர்கள்.


இஸ்லாமிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதாக சொல்லும் பலர் எப்படியாது தான் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதில் கருத்தாக இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக தவ்ஹீத் என்ற வட்டத்திற்குள் இருக்கும் சிலர் தங்கள் பிழைப்புக்காக மார்கத்தையே அடகு வைக்கிறார்கள்.
தவ்ஹீத் பிரபலங்கள் என்ற பட்டியலின் நீண்ட பகுதியில் தங்களுடைய பெயர் தடித்த எழுத்துக்களில் தெரிய வேண்டும் என்பது அவர்களின் கணவு.
இப்படிப் பட்டவர்கள் காலத்திற்குக் காலம் தங்களுக்கென்று ஒரு வழிமுறையை கையில் வைத்திருப்பார்கள்.
அதில் தற்போது அவர்கள் கையாலும் முறைகளில் மிக முக்கியமானது தங்கள் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் சோற்றில் ஊறுகாய் சேர்ப்பது போல் சகோதரர் பி.ஜெயைப் பற்றி மக்கள் மத்தியில் ஏதோ ஒரு விதத்தில் குறை சொல்லி பிரபலமாக நினைப்பது.
இப்படி குறை சொல்வதில்,சகோதரர் பி.ஜெ அவர்களை திட்டுவதில்,அசிங்கமாக வசை பாடுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பவர்களில் ஒருவர்தான் இலங்கையைச் சேர்ந்த ரிஸ்வான் மதனி என்பவர்.
யார் இந்த ரிஸ்வான் மதனி(?)
மக்கள் மத்தியில் பிரபலத்திற்காக,சுய இலாபத்திற்காக தனது சுய விருப்பு,வெருப்பிற்காக எதையும் செய்யத் துணியும் இது போன்ற பலவேஷக் காரர்களை மக்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்தக் கட்டுரையில் இவரைப் பற்றி குறிப்பாக எழுத வேண்டிய நிர்பந்தம் நமக்கு ஏற்பட்டுள்ளது.
(ஏற்கனவே நமது இணைய தளத்தில் இவர் தொடர்பான ஒரு கட்டுரையை நாம் பிரசுரித்திருந்ததையும் வாசகர்கள் கவணத்தில் கொள்ளவும்.)
பி.ஜெ அவர்களைப் பற்றியும் தவ்ஹீத் ஜமாத்தைப் பற்றியும் சகட்டு மேனிக்கு எழுத்திலும்,பேச்சிலும் திட்டித் தீர்க்கும் இவர் மதினாவில் பி.ஏ படித்த மதனியாம்.
அரபுப் பணத்தில் கணக்கு வழக்கில்லாமல் இஷ்டத்திற்கு விளையாடும் ஜெ.ஏ.எஸ்.எம்மின் மத்ரஸாவில் சில காலம் பணிபுரிந்தார்.
உண்மை உதயம்(?)என்ற தற்கால இருட்டுப் பத்திரிக்கையின் சில பக்கக்களை இவருடைய எழுத்துக்களும் கையாடல் செய்யும்.
அதே போல் கொழும்பில் இருந்து வெளிவரும் வேறு ஒரு மாதாந்தப் பத்திரிக்கையிலும் இவருடைய சகட்டு மற்றும் பகட்டு எழுத்துக்களை காண முடியும்.
பி.ஜெ யை திட்ட ஆரம்பித்தால் கண் மண் தெரியாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற பாணியில் திட்டித் தீர்ப்பார் இதே நேரம் தான் சொல்லும் கருத்தை பகிரங்க மேடையில் நிரூபிக்க அழைத்தால் முகவெரியே இல்லாமல் முடங்கிப் போய்விடுவார்.
இது இவருடைய அன்றாட வேலைகளில் ஒன்று எனலாம்.
சூனியம் விஷயமாக சகோதரர் பி.ஜெயின் கருத்தை சாட ஆரம்பித்த இவர் கருத்தை கருத்தால் எதிர் கொள்ள திராணியின்றி மக்கள் உள்ளத்தில் பி.ஜெயைப் பற்றிய ஒரு தப்பான எண்ணத்தை உருவாக்கும் சாக்கடை குணத்தில் மூலை மக்கிப் போய் இந்தக் காரியத்தில் இறங்கியிருந்தார்.
இதே நேரம் பி.ஜெயின் குர்ஆனில் தவறுகளா? என்ற தலைப்பில் தொண்டியில் நடந்த விவாதத்தில் முஜீபின் தரப்பால் அங்கு வந்தவர் இருதியாக  பி.ஜெயை சந்தித்த நேரத்தில் அவரிடம் முஸாபஹா செய்து,நலம் விசாரித்து, சிரித்துப் பேசிவிட்டு வந்ததும் அவருக்கு மறந்திருக்க வாய்பில்லை.
தான் இரட்டை முகம் காட்டுபவன் என்பதை பல நேரங்களில் நிரூபித்திருக்கிறார்.
சாக்கடைகளின் சங்கமம்.
சாக்கடைகளின் சங்கமமாக திகழும் இவர்களின் கருத்துக்களை எழுத்து வியாபாரம் செய்யும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இந்த ரிஸ்வான் மதனியின் புத்தகம் ஒன்றை தனது நிருவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
குறிப்பிட்ட புத்தகத்தில் வழிகெட்ட இயக்கங்களைப் பற்றி எழுத முன் வந்த இந்த மகான் தான் இருக்கும் வழிகெட்ட கொள்கையைப் பற்றி எழுதவில்லை.மற்ற வழி கெட்ட இயக்கங்களைப் பற்றி மட்டும் ஆய்வு செய்யப் புரப்பட்டவர் தான் சேற்றில் முத்துக் குளிப்பதை கடலில் முத்துக் குழிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.
குறிப்பிட்ட புத்தகத்தின் 21ம் பக்கத்தில் 6ம் பத்தியில் இந்தச் சாக்கடை எழுதியிருக்கும் ஒரு செய்தியை பாருங்கள்.
உதாரணமாக ஒருவன் முக்தி நிலையை அடைகின்ற போது கடமையற்றவனாக மாறுவான் என்ற கட்பனைக் கோட்பாட்டை உருவாக்கிய பாதினியாக்களுக்கும்,சூபியாக்களுக்கும் மத்தியில் காணப்படும் நெருங்கிய உறவுகளையும்,ஷீயாக்களுக்கும்,கப்ரு வணங்கிகளுக்கும் இடையில் காணப்படும் கருத்தொற்றுமைகளையும்,முஃதஸிலா,கவாரிஜ்,ஆகியோருக்கும்,தென்னிந்தியாவில் ஈரெழுத்து அழைப்பாளரைப் பின்பற்றும் தவ்ஹீத் வாதிகளுக்கும் இடையில் காணப்படும் உறவையும் பொய்யன் முஸைலமாவுக்கு வால் பிடித்தவர்களுக்கும்,காதியானிகளுக்கும் இடையில் காணப்படும் உடன்பாட்டையும் குறிப்பிடலாம்.
கட்டுரையாளர்சாடை மொழியில் சாடியிருப்பது (சிகப்பு எழுத்துக்களை கவணிக்கவும்) தமிழ் பேசும் உலகில் தலை சிறந்த இஸ்லாமிய பிரச்சாரகராக திகழும் சகோதரர் பி.ஜெ அவர்களைத்தான் என்பது பகிரங்க இரகசியமாகும். எழுத்தில் சொல்வதை நேரடியாகவும் தெளிவாகவும் சொல்லத் திராணியற்றதுணிவற்ற போக்குஅவர்களை இப்படி ஒழிவுமறைவாக வெறிபிடித்துகோழைத்தனமாக எழுதவும் தூசிக்கவும் வைத்துள்ளது.
சந்திரனின் ஒளியின் நிழலில் நின்று கொண்டுஅதைப் பார்த்து நாய்கள் குரைப்பதால்அதன் ஒளிக்கு எந்த சேதமும் வந்துவிடுவதில்லை. அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்! தீட்டத் தீட்ட வைரம் மிளிரும். பரிதாபம்! ஈயத்தைப் பார்த்து பல் இழிக்கிறது பித்தளை.” மனசு மரித்துப் போன சிலர்பி.ஜெ மீது வசை பாடுவதையே தமது முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். எனினும்,ஊலையிடும் ஓநாய்களின் ஓசைகளால்உறுதியாக தனது வேர்களை ஆழப்பதித்திருக்கும் மலைக்கு எதுவும் ஆகிவிடுவதில்லை.
 குர்ஆன் – ஸ{ன்னா போதகர்கள் என்று தம்மைத் தாமே அடையாளப்படுத்திக் கொண்டு,பித்அத்திற்கும் ஷிர்க்கான கவிதைகளுக்கும் உதவி செய்துபொதுப் பணத்தினால் வயிறு வளர்க்கும் இது போன்றவர்களின் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் சகோதரர் பி.ஜெ அவர்கள் சாடப்படுவது ஆச்சரியமான விஷயமல்ல. பள்ளிவாசல் கட்டுவதையும்கிணறு வெட்டுவதையும் தவிர வேறெதையுமே சாதிக்காத இந்த வெற்றுக் கும்பல்பி.ஜெயின் தஃவாவினால் அடி அசைந்து போயுள்ளது என்பதே உண்மை.
வேகமாகவும் விவேகமாகவும்ஒரே நேரத்தில் மாற்றாருக்கும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்தின் அனைத்துப் பகுதிகளையும் பற்றி தஃவா செய்யும் ஒரு தாயியைப் பார்த்துவேகமாக செல்லும் ரயிலைப் பார்த்து வெற்று வயலில் நின்று கத்தும் எருமைகளைப் போல்இவர்கள் காரணமின்றி வெறிக் கூச்சல் போடுவது ஏன்!?
வழி கெட்ட இயக்கங்கள் பற்றி புத்தகம் எழுதி,அடுத்தவர்களின் குறைகளை தேடி அழைந்ததமது குறைகளை படம் பிடித்துக் காட்டிய ரிஸ்வான் மதனியின் நிலையோ கறிச்சட்டியில் வாய் வைத்த சொறிப் பூனையின் நிலையாய் மாறிவிட்டது பரிதாபத்திற்குரிய விஷயமே. முல்லு ருசியில் கண்களை இறுக்கி மூடிக்கொண்டதால்இவர்களுக்கு சூரியனே இருட்டாகத் தெரிகிறது. குதிரைக்குக் கொம்பைக் கொடுக்காத இறைவன்கழுதைக்குக் காலைக் கட்டையாக்கி விட்டதன் தத்துவமும் இங்குதான் வெளிச்சத்திற்கு வருகிறது.
தமிழ் பேசும் நல்லுலகின் சிறந்த மார்க்க அறிஞராக திகழும் ஒருவரை முஸைலமா என்ற பொய்யனுடன் ஒப்பிட்டு சொல்லுமளவுக்கு பி.ஜெ வெறி இவர்களிடம் ஓங்கி இருப்பதை நாம் காணமுடிகிறது.
நியாயத்தை உணர முடியாதுஉண்மையைப் பேச முடியாதுஅயோக்கியர்களையும் துஷ்பிரயேகம் செய்தவர்களையும் காப்பாற்ற பக்கங்களைப் பாழ்படுத்திபொன்னான நேரத்தையும் காலத்தையும் சக்தியையும் வீணடித்துதீனாருக்கும் திர்கத்திற்கும் அடிமைப்பட்டுப் போன இத்தகைய மனித ஜடங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!