நாங்கள் அண்ணனின் பக்தர்களா? விமர்சனத்திற்கு பதில்.
Dr ஜாக்கிர் நாயக் தொடர்பாக நாம் வெளியிட்ட ஒரு ஆக்கத்திற்கு சகோதரர் ரிஸ்கான் முஸ்தீன் ஸலபி என்பவர் “டாக்டர் ஜாகிர் நாயிக்கை விமர்சிக்க கிழம்பியுள்ள அண்ணன் பக்த்தன்.” என்ற தலைப்பில் அனுப்பியிருந்த விமர்சனக் கடிதத்தையும், அதற்கு நாம் அவருக்கு அனுப்பிய வரிக்கு வரி பதிலையும் இங்கு பிரசுரிக்கின்றோம்.
ரிஸ்கான் முஸ்தீன் அனுப்பிய கடிதம்.
டாக்டர் ஜாகிர் நாயிக்கை விமர்சிக்க கிழம்பியுள்ள அண்ணன் பக்த்தன்.
ஜாகிர் நாயிக் தொடர்பான தங்களது கட்டுரையை நான் படித்தேன். அல்ஹம்துலிலாஹ்.
ஜாகிர் நாயிக் ஓர் இஸ்லாத்தை கற்றுத் தேர்ந்த அறிஞர் கிடையாது என்பது உலகறிந்த விடயம். ஆனால் அவர்விட்ட பிழையை இவ்வாரு தாருமாறாக விமர்சிப்பது சாணக்கியம் கிடையாது. மாறாக உங்களக்கு அவர்மீது ஏதும் காழ்ப்புணர்வு உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. அவர்விட்ட பிழையை நாகரிகமாக சுட்டிக்காட்டி அவரது சர்வதேச தஃவாவுக்கு ஒத்துழைப்பதை விட்டுவிட்டு ‘ஸாக்கிர் நாயக்கின் அறியாமை’ என கொட்டையாக தலைப்பிட்டு பங்சாயத்து வைத்து நீங்களே அதற்கு தீர்ப்பும் வளங்குவது உங்களுக்கே ஞாயமாக இருக்குதா?
உங்கள் அண்ணன் மட்டும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கேள்விக்கு பதில் கோடுத்து தாதா வாக இருக்க வேண்டும் என்று விறும்புகின்றீர்களா?
அவர் ஒன்னும் அண்ணனைப் போன்று புத்திக்குப் படுவதை போசிவிட்டு பிடிவாதம் பிடிப்பவர் கிடையாது. பிழைவிடாமல் இருப்பதற்கு ஒன்றும் அவர் மலக்கும் கிடையாது.
எனவே அல்லாஹ்வை இந்த விடயத்தில் நீங்கள் பயப்பட்டால் உங்கள் கருத்தை காழ்ப்புணர்வுகளுக்கு அப்பால் எடுத்து வையுங்கள் அல்லாஹ் அருக்கு தெளிவைக் கொடுக்க பிராத்தியுங்கள்.
இதைவிட்டு விட்டு ‘இதை இங்கே நாம் சுட்டிக்காட்ட காரணம் இதை பிற மத மக்களிடம் யாராவது சொல்லி தானும் மாட்டிக் கொண்டு இஸ்லாத்துக்கும் தவறான வடிவம் தந்து விடக் கூடாது என்பதற்காகவே.
இந்த ஆக்கத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஜாகிர் நாயக்குக்கு அனுப்பி அவரது விளக்கத்தை யாரேனும் பெற்று அனுப்பினால் அதையும் நாம் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.’ என வெறும் டயலொக் விட்டு அப்பாவி பொது மக்களிடம் உங்க மவ்ஸை கூட்டுவதற்கு முயற்சிக்காதீர்கள்.
எல்லம் வல்ல அல்லாஹ் மார்க்கத்தை அதன் தூய வடிவிலே தனிமனித வழிபாடுகளுக்கு அப்பால் விளங்கி செயற்படுத்தக் கூடிய பாக்கியத்தை எம்மனைவருக்கும் தந்தருள்வானாக!
இதோ சகோதரர் பிஜே அவர்களின் மாணவர்களில் ஒருவரான முஹம்மது ரஸ்மின் அளைஉ (iனெயை) டாக்டர் ஜாகீர் நாயக் தொடர்பான தனது குறுகிய புத்தியைப் பயன்படுத்தி விமர்சித்து அவரை வம்புக்கு இழுக்கும் போக்கிரித்தனத்தை பாருங்கள். அன்பின் சகோதரர்களே இப்படிப் பட்ட அறை குறைகளுக்கு நீங்கள் தான் தக்க பாடம் கற்பித்து தௌஹீதின் பெயரால் தனிமனித மோகத்தை வளர்க்கும் இவர்கள் வியாபாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
ரிஸ்கான் முஸ்தீன் ஸலபி.
…………………………………………………………………………………………………………………………………………………………….
நமது பதில்.
சகோதரர் ரிஸ்கான் முஸ்தீன் ஸலபி அவர்களுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும்………
டாக்டர் ஜாகிர் நாயக்கை விமர்சிக்கக் கிளம்பியுள்ள அண்ணன் பக்தன் என்று தலைப்பிட்டு தாங்கள் அனுப்பிய மின்னஞ்சல் எனக்குக் கிடைத்தது. அல்ஹம்து லில்லாஹ்.
அந்த மின்னஞ்சலில் நீங்கள் கூறியிருக்கும் சில விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது.
அதாவது தாங்கள் அதில் கூறியிருக்கும் முதல் விஷயம்.
ஜாகிர் நாயக் இஸ்லாத்தைக் கற்றுத் தேர்ந்த அறிஞர் கிடையாது என தாங்களே ஒத்துக் கொண்டீர்கள் அதனால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கில்லை. அவர் விட்ட பிழையை இப்படி தாருமாறாக விமர்சிக்கக் கூடாது மாறாக அதை அவருக்கு சுட்டிக்காட்டி அவருடைய சர்வதேச தஃவாவுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
சகோதரரே! தாங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் அதை ஏன் நீங்கள் முதலில் செய்யக் கூடாது?
ஜாகிர் நாயக் இஸ்லாத்தை கற்றுத் தேர்ந்தவர் அல்ல ஆனால் சகோதரர் பி.ஜெ அவர்கள் ஜாகிர் நாயக் போன்றவர் அல்லவே! அதாவது உங்களுடைய ஆசான் இஸ்மாயீல் ஸலபி(?)அவர்கள் முதல் நீங்கள் வரை உங்கள் முதீர் முதல் அடிமட்ட தொண்டன் வரை ஏன் பி.ஜெ அவர்களைப் பற்றிய குறைகளை தேடுகிறீர்கள். அவரிடம் குறை இருந்தால் அந்தக் குறையை நாகரீகமாக சுட்டிக்காட்டி அவருடைய தஃவாவுக்கு ஒத்துழைக்க வேண்டியது தானே! ஜாகிர் அவர்கள் விஷயத்தில் எமக்கு நீங்கள் செய்யும் அறிவுரையை உங்களுக்கு முதலில் பொருத்திப் பாருங்கள்.???????????????
ஏன் முடியவில்லை ஒரு காலத்தில் ஜெ.ஏ.எஸ்.எம்மில் இருந்த, தற்போது இருக்கின்ற அனைவருக்கும் அண்ணன் சொன்னால்தான் அது மார்க்கம் (ஆனால் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த நாங்கள் பி.ஜெயை ஒரு அறிஞராக பார்க்கிறோமே தவிர அவர் சொல்வது அனைத்தும் வேத வாக்கு என்று நம்பி தனி மனித வழிபாடு நடத்தவுமில்லை அப்படி நாங்கள் வளர்க்கப்படவும் இல்லை) இப்போது ஜெ.ஏ.எஸ்.எம்மில் ஆரம்பித்து ஏ.ஸீ.டீ.ஜெ வரை அனைவருக்கும் டாக்டர் ஜாகிர்தான் உளமார்ந்த ஹீரோ ஏன் இந்த தனிமனித மோகம்?……..
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் வரை பி.ஜெயின் கட்டுரை இடம் பெறாத உண்மை உதயமே இல்லை.
இப்போது பி.ஜெயை திட்டுவதற்கு உங்களுக்கு மேடைகள் பத்தவில்லை.பாவம் சந்திரனைப் பார்த்து நாய் குறைத்த கதையாகிவிட்டது உங்கள் கதை.
அடுத்ததாக உங்க அண்ணன் மட்டும் முஸ்லிம் அல்லாதவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்து தாதாவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்று கேட்கிறீர்கள்.
சகோதரா பி.ஜெ மாத்திரம் முஸ்லிம் அல்லாதவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதில்லை.
உங்களுக்கு பி.ஜெ யை மாத்திரம் தான் தெரியும் அவர் மட்டும்தான் மாற்றாரின் கேள்விகளுக்கு பதில் கொடுத்து தாதாவாக ஆகவேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் சகோ அல்தாபி சகோ : அப்பாஸ் அலி சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ் இது போல் இன்னும் பலர் இவர்கள் அனைவரும் மாற்று மதத்தவர்களின் கேள்விகளுக்கு பகிரங்கமாக பதிலளிக்கிறார்கள்.
அண்ணன் மாத்திரம் தான் தாதாவாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் இவர்களை மேடைகளில் ஏற்றியிருக்கவே மாட்டாரே!
இவ்வளவு ஏன் கடந்த 2010.02.27 அன்று கொழும்பிலும் சகோதரர் அல்தாபி அவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற மாற்று மத சகோதரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சியை நடத்தினாரே.தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஜாகிர் நாயக் அவர்கள் அண்ணனைப் போல் ஒன்றும் புத்திக்குப் படுவதைப் பேசிவிட்டு பிடிவாதம் பிடிப்பவர் கிடையாது என்று கூறியுள்ளீர்கள்.
அண்ணன் மார்க்க விஷயத்தில் என்ன புத்தியை நுழைத்தார் பட்டியலிட்டு விவாதிக்க நீங்கள் தயாரா? முதலில் உங்கள் தன்மான குரு இஸ்மாயீல் ஸலபி(?) அவர்களைக் அழைத்துக் கொண்டு சூனியம் தொடர்பான விவாதத்திற்கு வாருங்கள்.
நாங்களும் எழுதுகிறோம், நீங்களும் எழுதுங்கள் என்று வாய்ச்சவடால் விட்டுவிட்டு ஓடி ஒழியாதீர்கள்.
அடுத்து எங்களுடைய (TNTJ) அடிப்படைக் கொள்கையில் உள்ளது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட அல்லாஹ்வின் அடிமை என்பதும் அவரும் மனிதர்தான் என்பதும்.
அதனால் நாங்கள் ஒரு போதும் டாக்டர் ஜாகிர் பிழையே செய்யாத மலக்காக இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. (உங்கள் கொள்கை?)
நபியையே மனிதர் என்று நாங்கள் கூறும் போது இவர் எங்களுக்கு எம்மாத்திரம்?
அது போல் வெறும் டயலாக் விட வேண்டாம் என்றும் எழுதியுள்ளீர்கள்.
எப்படி டயலாக் அபூபக்கர் ஸித்தீக்(?)மதனி அவர்கள் அலவி மவ்லானாவிடத்தில் சொன்ன டயலாக்கைப் போலவா? அல்லது இந்த மாத உண்மை உதயத்தில(?)இஸ்மாயீல் ஸலபி(?)அவர்கள் ஜமாத்தே இஸ்லாமியைப் பற்றி விட்ட டயலாக்கைப் போலவா?
நாங்கள் பீ.ஜே யைப் பின்பற்றுகின்றோமா, இல்லையா? என்பற்கான மேலதிக விபரங்கள் அடங்கிய“தக்லீத் ஓர் ஆய்வு” என்ற ஆக்கத்தைப் பார்த்துப் பயனடையவும்.