தொழுகையைத் தடுத்தவர்களுக்கு எதிராக, நியாயத்தை சட்டமாக்கிய நீதிமன்றத் தீர்ப்பு.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன் – 9:32)
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பல திசைகளிலும் இஸ்லாத்தின் கருத்தை இலங்கை முழுவதும் கொண்டு செல்வதற்கான முழுமையான செயல் திட்டத்தில் பல ஊர்களிலும் கிளைகள் அமைக்கப்பட்டு தூய ஏகத்துவ செய்தியை மக்கள் மத்தியில் பகிரங்கமான ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
சத்தியக் கொள்கையை விட்டுக் கொடுப்பின்றி உள்ளதை உள்ளபடி எத்தி வைக்கும் தூய பணியில் பலவிதமான பிரச்சினைகளையும், சிக்கள்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் இந்த ஜமாத்தின் சத்தியப் பயணத்தில் தடைக் கல்லாக அசத்தியவாதிகளுடன் கைகோர்த்த பல போலித் தவ்ஹீத் வாதிகளும் இருக்கிறார்கள்.
அந்த அடிப்படையில் இன்றைக்கு பல ஊர்களிலும் சத்தியப் பிரச்சாரப் பணியில் கஷ்டங்களைச் சந்திக்கும் நமது சகோதரர்களுக்கு மற்ற இயக்கத்தவர்கள் வழிகெட்ட கொள்கை கொண்டவர்கள் எப்படி தடைக்கல்லாக இருக்கிறார்களோ அதே போல் போலித் தவ்ஹீத் வாதிகளும் அவர்களை விஞ்சும் அளவுக்கு சத்தியத்திற்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள்.
அதற்கு ஓர் அண்மைய உதாரணம் தான் பரகஹதெனியவில் நடை பெற்ற சம்பவம்.
நடந்தது என்ன?
கடந்த சில மாதங்களாகவே பரகஹதெனியவில் நமது கொள்கைச் சகோதரர்களுக்கும், ஜெ.எ.எஸ்.எம் என்ற பள்ளி கட்டும் கம்பணிக்கும் மத்தியில் ஒரு சிக்கள் நீடித்து வருகின்றது. காரணம் நம் சகோதரர்கள் தனியாகத் தொழுவதை நிறுத்த வேண்டும். ஜும்மா நடத்தக் கூடாது இதுதான் பள்ளி கட்டும் குறிப்பிட்ட கம்பணியின் வாதமாகும்.
தொடர்ந்து வந்த பிரச்சினைகளின் உச்சகட்டமாக நமது சகோதரர்கள் அங்குள்ள சிலரால் தாக்கப்பட்டு ஜும்மா நடத்தப்படக் கூடாது என்று எச்சரிக்கப்படுகின்றார்கள்.
இறுதியில் இதற்கான முடிவு எட்டப்பட முடியாமல் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுகின்றது.
சத்தியத்தை எதிர்க்க ஓரணியில் திரண்ட அசத்தியவாதிகள்.
மாவத்தகம பொலீஸ் நிலையத்திற்கு விசாரனைக்கு வரும்படி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களுக்கும், பள்ளி கட்டும் கம்பணிக்கும் அழைப்பு வருகின்றது.
பொலீஸ் நிலையத்தில் விசாரனைக்காக அழைக்கப்பட்ட ஜெ.எஸ்.எம் தரப்பில் மழைக்குக் கூட பள்ளிப் பக்கம் ஒதுங்காத ரவுடிக் கும்பல் ஒன்றும், பல நாள் பகை மறந்து நம்மை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள தப்லீக் பள்ளி நிர்வாகவும் கைகோர்த்து வந்திருந்தார்கள்.
பொலீஸ் நிலையத்தில் பச்சைத் தூஷனத்தில் பேசுவதும், மிரட்டுவதுமாக இவர்களின் இழி செயல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினருக்கு தொழுகை நடத்த முடியுமா? முடியாதா? என்ற விசாரனைக்கு வந்த எதிர்த்தரப்பினரில் பள்ளி கட்டும் கம்பணியின் ஆயுட்கால தலைவர் அபுபக்கர் சித்தீக் (?) மதனியும் அவரின் ஆத்மீக சீடர் இஸ்மாயீல் ஸலபியும் கூடவே கம்பணியின் துரும்புச் சீட்டு கலீலுர் ரஹ்மானும் வந்திருந்தனர்.
தப்லீக் ஜமாத்தினருடனும், ரவுடிக் கும்பலுடனும் கைகோர்த்து வந்திருந்தவர்கள் தொழுகை நடத்துவதைப் பற்றிப் பேசுவதற்கு பதிலாக இவர்கள் (எஸ்.எல்.டி.ஜெ) எங்களைப் பற்றி இணையதளங்களில் அவதூறுப் பிரச்சாரம் செய்கிறார்கள். அதை பற்றிப் பேச வேண்டும் என்று குரு, சிஷ்யர்கள் இருவரும் பொலீசாரிடம் கூறினார்கள்.
அதற்கு பதிலளித்த நமது தரப்பு சகோதரர்கள் இந்த விசாரனை அதைப் பற்றியது அல்ல உண்மையில் இவர்கள் அதாவது ஜெ.ஏ.எஸ்.எம் தரப்பினர் சொல்வதைப் போல் அவர்களைப் பற்றி நாம் அவதூறுகளை எழுதியிருந்தால் அதைப்பற்றி பொலீஸில் புகார் கொடுக்க சொல்லுங்கள். இணையதளங்கள் தொடர்பான புகார்களுக்காகவே “சைபர் கிரைம்” என்றொரு பிரிவு பொலீஸ் நிலையங்களில் இருக்கிறது. அதில் புகார் செய்யுங்கள். உண்மையில் அவதூறு பரப்புபவர்கள் யார்? என்பதை நாங்களும் ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயார் என்று பொலீசார் முன்னிலையிலேயே சிங்கள மொழியில் எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன் வாயடைத்த குருவும், சிஷ்யரும் வழமை போல் தங்கள் பக்த கோடிகளை வைத்து காய் நகர்த்த ஆயத்தமானார்கள்.
கூடவே அழைத்து வந்திருந்த ரவுடிகளை வைத்து ரவுடிசம் நடத்த ஆயத்தமானார்கள்.
SLTJ காரனை மையவாடியில் அடக்கம் செய்ய விடமாட்டோம்.
பொலீஸ் நிலையத்தில் ஒரு மார்கம் தெரிந்த கூட்டத்தினரைப் போல் நடந்து கொள்வதை விடுத்து ரவுடிசம் செய்ய ஆரம்பித்த ஜே.ஏ.எஸ்.எம் நிர்வாகத்தின் நிர்வாகக் குழுவைத் சேர்ந்த ஒருவர் எழும்பி நமது சகோதரர்களை நோக்கி “நீங்கள் மரணித்தால் எங்கள் மையவாடியில் கூட உங்களை அடக்க விடமாட்டோம்” என்று அகங்காரமாகப் பேசினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பள்ளி கட்டும் கம்பணியின் தலைவரும் அவரின் சிஷ்யரும் அதை ஏற்றுக் கொள்வதைப் போல் அமைதிகாத்தார்கள்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் இதே மாவத்தகம பொலீஸ் நிலையத்தில் இந்த கம்பணியினருடன் நடத்த ஒரு பிரச்சினையில் கம்பணியின் தலைவர் அபுபக்கர் சித்தீக் மதனி, “இவர்கள் சிலை வணங்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்” என்று பொலீஸ் அதிகாரியிடும் நம்மைப் பற்றி புகார் செய்தார்.
காரணம் அந்தக் கம்பணியின் கொள்கை சிலை வணங்கலாம் என்பதாக இருந்திருக்கும். அதனால் தான் என்னவோ இப்படிப்பட்ட புகார்களை நாகூசாமல் பொலிஸிலேயே சொல்ல முன்வருகின்றார்கள். எஸ்.எல்.டி.ஜெ யை எதிர்க்க வேண்டும் என்றால் எப்படிப் பட்ட அயோக்கியத் தனத்தையும் நாங்கள் செய்யத் தயார் என்பதே பள்ளி கட்டும் கம்பணியின் கொள்கையாக இருக்கிறது.
நீதி மன்றத்தில் கிடைத்த நீதியான தீர்ப்பு.
இறுதியாக இவர்களுடன் பேசிப் பிரயோஜனம் இல்லை என்பதை அறிந்த நமது சகோதரர்கள் வழக்குத் தொடுக்க முடிவெடுத்து எதிர்தரப்பினரின் மீது வழக்குத் தாக்கள் செய்தார்கள்.
கடந்த 29.06.2012 அன்று மாவத்தகம நீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கில் சத்தியத்திற்கு அல்லாஹ் வெற்றியைக் கொடுத்தான்.
ஆம் அரசியல் வாதியுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட ஜெ.ஏ.எஸ்.எம் மின் அயோக்கியத் தனத்திற்கு அல்லாஹ்வின் உதவியினால் சாவு மணி அடிக்கப்பட்டது.
தொழுவதைத் தடுப்பதற்கு மார்க்கத்தில் எப்படி தடையில்லையோ அதே போல் தான் இலங்கையின் சட்டக் கோவையின் படி யாரும் தொழுவதற்கு தடை விதிக்க முடியாது. இதனடிப்படையில் யாரும் சமாதானத்திற்கு குந்தகமாக இருக்கக் கூடாது. பிரச்சினைக்கு முன்பு வரை என்ன நிலை நீடித்ததோ அதே நிலை தொடர வேண்டும். என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் நமது சகோதரர்கள் தனித்துத் தொழுவதை யாரும் தடை செய்ய முடியாது என்பதை நீதி மன்றம் தெளிவாக அறிவித்தது.
“உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடிய தாகவே உள்ளது” (அல்குர்ஆன் – 17:81)