Blogger Widgets

Monday, November 25, 2013

தொழுவதற்கு இடமில்லை! வீதியில் தொழுகின்றனர்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சத்தியத்தூதை சளைக்காமல் சந்து பொந்து எங்கிலும் சொல்லி வருகிறோம். இதை பொறுத்துக்கொள்ள முடியாத வழிகெட்ட கும்பல்கள் இதற்கெதிராக பல சதி முயற்சிகளை மேற்கொண்டாலும் இவை அத்தனையையும் தகர்த்தெறிந்துவிட்டு நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக இத் தூய மார்க்கம் தலைத்தோங்கியே வருகிறது. 

இதன் வெளிப்பாடு, எமது மர்கஸில் வாராந்த ஜூம்ஆ கடமையை நிறைவேற்ற வரும் கூட்டம் கட்டுக்கடங்காது பெருகிக்கொண்டே வருகிறது. இதனால் எமது மர்கஸ் நிரம்பி வழிவதுடன் மர்கஸிற்கு அருகிலுள்ள இடத்தை பயன்படுத்தியும் கூட இடம் போதாமல் வீதி வரை சென்று கொண்டிருக்கிறது. புகழனைத்தும் அந்த அல்லாஹ் ஒருவனுக்கே! அல்ஹம்துலில்லாஹ்.

இதனை நிவர்த்தி செய்யும் முகமாக எமது கிளை விசாலமான வேறு ஒரு இடத்தை தெரிவு செய்து அதை வாங்குவதற்கான திட்டத்தில் இறங்கியிருக்கிறது. இதற்கு சுமார் பத்து இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

இதை இன்னும் இருபது நாட்களுக்குள் திரட்ட வேண்டியிருக்கிறது.
நமது அமைப்பு அரசாங்கமிடமிருந்தோ , எந்தவொரு வெளிநாட்டு நிதி நிறுவனமிடமிருந்தோ எதுவித நிதியையும் பெறாமல் பொதுமக்களிடமிருந்து நிதியைப் பெற்றே தஃவா பணிகளை செய்துவருவதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

எனவே அல்லாஹ்வின் மார்க்கத்தை வளர்க்க கொள்கை சகோதரர்களிடம் கோரிக்கை விடுக்கிறோம். 

மறுமையில் மகத்தான வெற்றி பெற விரும்பும் சகோதரர்கள் தங்களது நன்கொடையை மனமுவந்து அளித்து இம்மார்க்கத்தை மென்மேலும் வளர்ந்தோங்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எமது கிளையின் வங்கிக்கணக்கு எண் 

184010001599

Hatton National Bank (HNB) Karaitivu Branch


(வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புவோர் பணம் அனுப்பிய விபரத்தை எமது கிளையின் ஈ-மெயில் முகவரியான sltjsmb@gmail.com எனும் முகவரி்க்கோ அல்லது எமது தொடர்பு இலக்கத்துக்கோ அறியத்தரவும்)


தொடர்புகளுக்கு :

0752343834