Blogger Widgets

Monday, November 25, 2013

அந்நிய ஆணுக்கு பாலூட்டுதல்- இஸ்மாயில் சலபியின் மடமைக்கு மறுப்பு



“பருவ வயதை அடையாத 17 வயது அநாதைச் சிறுவன்.” – என்ற தலைப்பில் இஸ்மாயீல் ஸலபி என்பவர் ஓர் ஆக்கத்தை எழுதியிருந்தார். குறித்த ஆக்கத்தில் உளரல்களும், பொய்களும், தில்லுமுல்லுகளும் தாராளமாகவே நிறைந்து காணப்பட்டன. குறித்த ஆக்கத்திற்குறிய பதிலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்பு – இஸ்லாமிய மாத இதழில் சகோதரர் ரஸ்மின் MISc எழுதி வருகின்றார். நவம்பர் மாத இதழில் வெளியிடப்பட்ட முதல் தொடரை இங்கு வெளியிடுகின்றோம்.  இந்த தொடர் ஆக்கத்தின் மூலம் இஸ்மாயீல் ஸலபியின் அனைத்து உளரல் வாதங்களுக்கும் பதில் தரப்படும் இன்ஷா அல்லாஹ்.
அழைப்பு மாத இதழில் வெளியிடப்பட்ட பின் அடுத்தடுத்த தொடர்கள் நமது இணையதளத்திலும் வெளியிடப்படும்.
இளைஞராக இருந்த அந்நிய ஆணாகிய ஸாலிமுக்கு பாலூட்டுமாறு ஸஹ்லா என்ற பெண்மணியிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றும், அவர் இளைஞராக இருக்கிறாரே? தாடி வளர்ந்தவராக இருக்கிறாரே என்று அப்பெண்மணி மறுத்த பின்னரும் எனக்கு அது தெரியும்; அவருக்குப் பாலூட்டு; அவ்வாறு பாலூட்டினால் அவர் மகன் என்ற நிலைக்கு வந்து விடுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாகவும் பொருள்படும் வகையில் அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் இட்டுக்கட்டப்பட்டவை என்றும் நாம் வாதிட்டு வருகிறோம்.
இது திருக்குர்ஆனுடன் எவ்வாறு மோதுகிறது என்பதையும் ஏராளமான ஆதாரங்களுடன் நாம் நிலைநாட்டியுள்ளோம். அந்த வாதங்களுக்கு மறுப்பு சொல்ல வக்கில்லாதவர்கள் சம்மந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு திசை திருப்பி வருகின்றனர்.
வளர்ந்த இளைஞனுக்கு அந்நிய ஆண் பாலூட்டலாம். அதனால் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்றால் அனுமதிக்கப்பட்ட இந்த ஒரு விஷயத்தை தேவைப்பட்டால் நீங்கள் உங்கள் குடும்பத்தில் அனுமதிப்பீர்களா? என்ற கேள்விக்கு முகம் கொடுக்க முடியாமல் வேறு விதமாக உளறுகின்றர். இது உண்மை தான் ஆனால் உண்மை இல்லை என்ற பாணியில் உளறிக் கொட்டி வருகின்றனர்.
உண்மையில் இதைச் செயல்படுத்த முடியாது என்ற நிலைபாட்டை மறைமுகமாக இவர்களும் எடுக்கிறார்கள்.
இது போல் இவர்களால் பதில் சொல்ல முடியாத பல கேள்விகளை ஹதீஸ்கள் குர் ஆனுக்கு முரண்படுமா? என்ற நூலில் காணலாம். அந்த நூல் இல்லாதவர்கள் கீழ்க்காணும் இணைப்பில் அதனை வாசிக்கலாம்.
மேலும் ஏகத்துவம் ஜூன் 2013 இதழிலும் காணலாம். அந்த இதழ் இல்லாதவர்கள் கீழ்க்காணும் இணைப்பில் அதை வாசிக்கலாம்.
இது குறித்து இஸ்மாயீல் சலபியோ மற்ற சலபிகளோ எழுதிய மறுப்புகள் அனைத்தையும் படித்துப் பார்த்தால் மேற்கண்ட ஆக்கங்களில் நாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருக்க மாட்டார்கள் என்பதை அனைவரும் அறியலாம்.
ஒரு பெண் நினைக்கும் போதெல்லாம் பாலூட்ட முடியாது; பாலூட்டுவது என்றால் அந்த நேரத்தில் கைக்குழந்தை இருக்க வேண்டும் என்று நாம் துணைக் கேள்வியையும் கேட்டு இருந்தோம்.
அடிப்படையான மேலே நாம் சுட்டிக்காட்டிய கேள்விகளை விட்டு விட்டு இந்த துணைக் கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கிறேன் என்ற பெயரில் இஸ்மாயீல் சலபி என்பவர் உளறி இருந்தார்.
அந்த உளறலுக்கு பீஜே அவர்கள் தமது ஆன்லைன் பீஜே இணைய தளத்தில் பதில் கொடுத்திருந்தார். அந்தப் பதிலுக்கு பல மாதங்கள் ஆராய்ச்சி செய்து இப்போது இஸ்மாயீல் ஸலபி இன்னொரு மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எனவே பாலூட்டுதல் தொடர்பாக அவரும் அவரது கருத்தில் உடன்பட்டவர்களும் எப்படியெல்லாம் தவறாக சிந்திக்கிறார்கள் அல்லது சிந்திக்காமல் உளறுகிறார்கள் என்பதை விளக்கும் வரிக்குவரி மறுப்புத்தொடரை நாம் வெளியிடுகிறோம்.
இதில் இந்தக் கூட்டத்தினர் கியாம நாள் வரை ஆனாலும் பதில் சொல்ல முடியாத கேள்விகள் அணிவகுத்து வரும் இன்ஷா அல்லாஹ்.
ஆயினும் அந்த நேரத்தில் ஸஹ்லாவுக்கு கைக்குழந்தை இருந்ததா? என்பது தான் புதுவாதமாக இருப்பதால் அதை ஆய்வு செய்து விட்டு அன்னிய ஆணுக்கு பாலுட்டுதல் பற்றிய கட்டுக்கதையை அலசுவோம்.
ஸஹ்லா (ரலி) அவர்களுக்கு அந்த நேரத்தில் கைக்குழந்தை இருந்ததா என்பதற்கு இஸ்மாயீல் ஸலபி எடுத்து வைக்கும் முதல் ஆதாரம் – முக்கிய ஆதாரம் இதுதான்.
முதல் வாதம்.
இளைஞனுக்கு பாலூட்டுமாறு அந்தப் பெண்ணிடம் நபியவர்கள் சொன்னதில் இருந்தே அவருக்கு பாலூட்டும் வயதில் குழந்தை இருந்தது என்பது தெரிகிறது.
இந்த வாதத்தை அவரது எழுத்தில் காணுங்கள்!
……………………………………….
ஒரு சம்பவத்தைப் புரிந்து கொள்ளும் போது அந்த சம்பவத்திலிருந்து முறையாக சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஹதீஸை மறுப்பதற்கு ஏதாவது வாதம் செய்ய வேண்டும் என்ற வழி தவறிய சிந்தனையின் அடிப்படையில் கேள்விகளைத் தொடுப்பது ஹதீஸை அணுகும் முறையல்ல.
குறித்த ஹதீஸில் ஸாலிம் அவர்களுக்குப் பால் கொடுத்தார்கள் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. அப்படியென்றால் அவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தில் வேறு குழந்தை இருந்திருக்கின்றது என்பதுதானே அர்த்தம்!
நபி (ஸல்) அவர்கள் பாலூட்டச் சொன்ன போது ஸாலிம் வளர்ந்து வாலிபராகி விட்டாரே என ஸஹ்லா (ரழி) அவர்கள் கேட்கின்றார்கள். அந்த சந்தர்ப்பத்தில் ஸஹ்லா (ரழி) அவர்களிடம் கைக்குழந்தை இல்லையென்றால் என்னிடத்தில் பால் இல்லாத போது நான் எப்படிப் பால் கொடுப்பது என்றல்லவா கேட்டிருப்பார்கள்?
‘நீ பால் கொடு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் என்றால் ஸஹ்லா (ரழி) அவர்கள் பால் கொடுக்கக் கூடிய நிலையில் இருக்கின்றார்கள் என்பதை நபி (ஸல்) அறிந்துதான் சொல்லியிருக்கிறார்கள் என்று தானே புரிந்து கொள்ள வேண்டும்?
ஸஹ்லா (ரழி) அவர்களுக்கு அப்போது கைக்குழந்தை இருந்ததா? நிரூபிக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பி தம்மைப் பகுத்தறிவாளர்களாகவும் உலக மகா மேதைகளாகவும் பறைசாற்ற விரும்புபவர்களின் சிந்தனையில் முழுக்க முழுக்க ஷத்தானின் ஆதிக்கம் நுழைந்திருப்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.
இந்த ஹதீஸை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் ஸஹ்லா (ரழி) அவர்களது காலத்தில் வாழ்ந்தவர்கள். அவருக்கு அப்போது கைக் குழந்தை இல்லையென்றால் குழந்தை இல்லாமல் எப்படிப் பால் கொடுத்தார்கள் என்ற சிந்தனை ஆயிஷா (ரழி) அவர்களுக்கு வந்திருக்காதா?
இந்த ஹதீஸை வைத்து ஆயிஷா (ரழி) அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் பால் புகட்டி மஹ்ரமான உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று கருதுகின்றார்கள். நபி (ஸல்) அவர்களது ஏனைய மனைவியர் இது ஸாலிம் (ரழி) அவர்களுக்குக்கு மட்டும் உரிய பிரத்தியேக சட்டம் என்ற கருத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கிடையில் இது குறித்து வாதப் பிரதிவாதங்கள் கூட இடம் பெற்றுள்ளது.
ஸஹ்லா (ரழி) அவர்கள் ஸாலிம் (ரழி) அவர்களுக்குப் பால் கொடுத்து தாய் – பிள்ளை உறவை ஏற்படுத்திக் கொண்டார்கள் என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறும் போது என்ன ஆயிஷா இப்படிக் கூறுகின்றீர்கள்? ஸஹ்லா எப்படிப் பால் கொடுத்தார்? அவருக்குத்தான் அப்போது குழந்தையே இருக்கவில்லையே! என்று ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை என்றால் அவருக்குக் கைக் குழந்தை இருந்துள்ளது என்பதுதானே அர்த்தம்?
………………………………………………………
நமது பதில்.
சிந்திக்கும் திறன் பற்றி பாடம் நடத்துகிறார். ஆனால் இவர் நடத்தும் பாடமே இவருக்கு சிந்திக்கும் திறன் கடுகளவும் இல்லை எனக் காட்டுகிறது.
இவர் வைக்கும் வாதங்களை அறிவும் ஆய்வுத் திறனும் உள்ள யாரும் எடுத்து வைக்க மாட்டார்கள். இந்தச் சம்பவம் பொய் என்றும் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்றும் நாம் தக்க சான்றுடன் வாதிடுகிறோம். நமக்கு எதிராக ஆதாரத்தை வைக்கும் போது நாம் மறுக்கக் கூடியதை ஆதாரமாக வைக்கலாமா? இது அறிவுடையோரின் செயலா?
எது பொய்யானது என்று எங்களால் மறுக்கப்படுகிறதோ அது பொய் இல்லை என்று நிரூபித்து விட்டு அது குறித்து நாம் கேட்ட கேள்விகளுக்கு ஒன்று விடாமல் பதில் அளித்து விட்டு அந்தப் பதிலுக்கு எங்களால் பதில் சொல்ல முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டு அதன் பிறகுதான் இதை எங்களிடம் ஆதாரமாகக் காட்ட முடியும் என்ற அடிப்படை அறிவு கூட இவருக்கு இல்லை.
இன்னும் சொல்லப் போனால் அது சரியான ஹதீஸ் தான்; பொய் அல்ல என்று இவர்கள் நிறுவி விட்டால் அந்த நேரத்தில் கைக்குழந்தை இருந்ததா என்ற கேள்வியை நாங்களே திரும்பப் பெற்று விடுவோமே?
இவர்களின் சிந்தனையில் எங்கே கோளாறு உள்ளது என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
காதியானிகள் மிர்ஸா குலாம் என்ற பொய்யனை நபி என்று நம்புகிறார்கள். இதற்கு என்ன ஆதாரம் என்று இஸ்மாயீல் ஸலபி கேட்கிறார். மிர்ஸா அவர்களே இதோ தன்னை நபி என்று சொல்லி விட்டார்களே? நபியே தன்னைப் பற்றி நபி என்று சொன்னதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? என்று காதியானிகள் சொன்னால் அதை இஸ்மாயீ ஸலபி ஏற்றுக் கொள்வாரா? நாங்கள் தான் அவனைப் பொய்யன் என்று சொல்கிறோமே அவனது கூற்றை எப்படி ஆதாரமாக காட்டுகிறாய் என்று கேட்பாரா?
யாராவது எழுதி வைத்ததையும் சொன்னதையும் அப்படியே காப்பி அடிப்பவர்கள் இப்படித்தான் உளறுவார்கள். ஒரு வாதத்தை எடுத்து வைக்கும் முன்னர் அது குறித்து முதலில் சிந்தித்து விட்டு எடுத்து வைக்க வேண்டும்.
இரண்டாவது ஆதாரம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னிய ஆணுக்குப் பாலூட்டுமாறு ஸஹ்லா அவர்களுக்குச் சொன்ன போது அவருக்கு கைக்குழந்தை இருந்தது என்பதற்கு பிரதானமாக இஸ்மாயீல் ஸலபி எடுத்து வைக்கும் இரண்டாவது ஆதாரத்தை அவரது வார்த்தைகளில் காணுங்கள்!
…………………………………….
இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர் ஒரு மறுப்புக்காக இது பற்றிக் கூறும் போது பின்வருமாறு கூறுகிறார்.
زاد المعاد (5/ 513)
 وأما حديث سهلة في رضاع سالم فهذا كان في أول الهجرة لأن قصته كانت عقيب نزول قوله تعالى : { ادعوهم لآبائهم } [ الأحزاب : 5 ] وهي نزلت في أول الهجرة
மொழிப்பெயர்ப்பு:
‘ஸாலிம் (ரழி) அவர்களுக்கு ஸஹ்லா (ரழி) அவர்கள் பால் கொடுத்த நிகழ்ச்சி ஹிஜ்ரத்தின் ஆரம்பத்தில் நடந்ததாகும். ஏனெனில், இந்த சம்பவம் ‘அவர்களை அவர்களது தந்தையர் பெயர் கூறி அழையுங்கள்’ (33:5) என்ற வசனம் அருளப்பட்ட போது நடந்ததாகும். இந்த வசனம் ஹிஜ்ரத்தின் ஆரம்பத்தில் அருளப்பட்டதாகும்.’ (ஸலாதுல் மஆத்: 5/513)
(இந்த நிகழ்வு ஹிஜ்ரி ஆரம்ப கட்டத்தில்தான் நடைபெற்றது என்பதை மறுக்காத இமாமவர்கள் இது தொடர்பான வாதங்களை மறுப்பது நோக்கத்தக்கது.)
………………………………………………..
நமது மறுப்பு.
இஸ்மாயீல் ஸலபிக்கும், ஆய்வுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை முன்னர் பார்த்தோம். உண்மைக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லை என்பதை இந்த வாதத்தின் மூலம் அவர் நிரூபித்து விடுகிறார்.
இவர் இங்கே செய்யும் வாதம் என்ன? ஹிஜ்ரி ஆரம்பத்தில் இந்த சம்பவம் நடந்து விட்டது. ஆரம்பத்தில் அதாவது முதல் வருடத்தில் இந்த சம்பவம் நடந்து விட்டதால் அபீசீனியாவில் பிறந்த குழந்தை முஹம்மதுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் பால் குடிக்கும் வயதுதான் இருந்திருக்கும்.
இதுதான் இந்த வாதத்தின் சாராம்சம்.
இதில் இவர் செய்த தில்லுமுல்லுகள் ஒன்றல்ல. ஏராளம். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
இவர் எடுத்துக் காட்டும் மேற்கோளில் அதற்கு முன்னுள்ள ஒரு முக்கியமான வார்த்தையை – வாக்கியத்தை –  வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விட்டார். அந்த முக்கியமான வார்த்தை இருந்தால் இவர் சொன்னதற்கு மாற்றமான கருத்தை இவ்வாக்கியம் தந்து விடும் என்பதை அறிந்து கொண்டே வேண்டுமென்றே இந்த இருட்டடிப்பைச் செய்துள்ளார்.
சந்தனக் கூடு எடுக்கலாம் என்று அப்துல்லாஹ் ஜமாலி சொன்னார் என்று இஸ்மாயீல் ஸலபி ஒரு நூலில் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
இதை நான் எடுத்துக் காட்டும் போது சந்தனக் கூடு எடுக்கலாம் என்று இஸ்மாயீல்ஸலபி எழுதியுள்ளார்என்று சொல்லலாமா? சொன்னால் அதை அவர் ஏற்றுக் கொள்வாரா?
அது போன்ற தில்லுமுல்லு வேலையைத்தான் இங்கே செய்துள்ளார்.
قالوا : وأما حديث سهلة في رضاع سالم فهذا كان في أول الهجرة لأن قصته كانت عقيب نزول قوله تعالى : { ادعوهم لآبائهم } [ الأحزاب : 5 ] وهي نزلت في أول الهجرة
நாம் பெரிய எழுத்தில் சிகப்பு நிறத்தில் கோடிட்டுள்ள பகுதியைத் தான் அவர் இருட்டடிப்பு செய்து மோசடி செய்துள்ளார்
இதன் பொருள் என்ன?
ஸாலிம் (ரழி) அவர்களுக்கு ஸஹ்லா (ரழி) அவர்கள் பால் கொடுத்த நிகழ்ச்சி ஹிஜ்ரத்தின் ஆரம்பத்தில் நடந்ததாகும். ஏனெனில், இந்த சம்பவம் ‘அவர்களை அவர்களது தந்தையர் பெயர் கூறி அழையுங்கள்’ (33:5) என்ற வசனம் அருளப்பட்ட போது நடந்ததாகும். இந்த வசனம் ஹிஜ்ரத்தின் ஆரம்பத்தில் அருளப்பட்டதாகும்என்று அவர்கள் சொல்கிறார்கள்.
என்று அவர்கள் சொல்கிறார்கள் என்று ஸாதுல் மஆத் ஆசிரியரான இப்னுல் கையிம் சொல்கிறார் என்றால் இது அவரது கூற்று அல்ல. வேறு சிலர் சொன்னதை எடுத்துக் காட்டுகிறார் என்பது தான் பொருள்.
அவர்கள் சொல்கிறார்கள் என்று இப்னுல் கையிம் யாரைச் சொல்கிறார் என்று முன்னால் உள்ள வரிகளை வாசித்து அவர்கள் யார் என்று அறிந்து கொண்டு வாதிட்டால் அவர்கள் உண்மையாளர்கள் எனலாம். ஆய்வாளர்கள் எனலாம்.
ஆனால் என்று அவர்கள் சொல்கிறார்கள் என்பதைத் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து விட்டு அவர்கள் என்பவர்கள் யார் என்பதையும் மறைத்து விட்டு
இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் ஒரு மறுப்புக்காக இது பற்றிக் கூறும் போது பின்வருமாறு கூறுகிறார்.
என்று இஸ்மாயீல் ஸலபி கூறுகிறார்.
அதாவது இப்னுல் கையும் அவர்கள் யாருக்கோ மறுப்பு சொல்வதற்காக இதைச் சொல்கிறார்கள் என்கிறார்.
இது இரண்டாவது தில்லு முல்லு.
அத்துடன் விட்டு விடாமல்
(இந்த நிகழ்வு ஹிஜ்ரி ஆரம்ப கட்டத்தில்தான் நடைபெற்றது என்பதை மறுக்காத இமாமவர்கள் இது தொடர்பான வாதங்களை மறுப்பது நோக்கத்தக்கது.)
என்று எழுதி இந்தக் கருத்தை இப்னுல் கையும் அவர்கள் ஏற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு மறுப்புச் சொல்கிறார் என்று இஸ்மாயீல் ஸலபி கூறுகிறார்.
இது ஒரே விஷயத்தில் இவர் செய்த மூன்றாவது தில்லுமுல்லு ஆகும்.
இப்னுல் கையும் (ரஹ்) சொல்வது என்ன?
அதை அரபு மூலத்துடன் கீழே தந்துள்ளோம்.
அனைத்தையும் மொழிபெயர்த்தால் பக்கங்கள் அதிகமாகி விடும் என்பதால் அதில் உள்ள சுருக்கத்தை மட்டும் கீழே தந்துள்ளோம்.
زاد المعاد (5/ 513)
ولنذكر مناظرة أصحاب الحولين والقائلين برضاع الكبير فإنهما طرفان وسائر الأقوال متقاربة
 قال أصحاب الحولين : قال الله تعالى : { والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة } [ البقرة : 233 ] قالوا : فجعل تمام الرضاعة حولين فدل على أنه لا حكم لما بعدهما فلا يتعلق به التحريم قالوا : وهذه المدة هي مدة المجاعة التي ذكرها رسول الله صلى الله عليه و سلم وقصر الرضاعة المحرمة عليها قالوا : وهذه مدة الثدي الذي قال فيها : [ لا رضاع إلا ما كان في الثدي ] أي في زمن الثدي وهذه لغة معروفة عند العرب فإن العرب يقولون : فلان مات في الثدي أي : في زمن الرضاع قبل الفطام ومنه الحديث المشهور : [ إن إبراهيم مات في الثدي وإن له مرضعا في الجنة تتم رضاعه ] يعني إبراهيم ابنه صلوات الله وسلامه عليه قالوا : وأكد ذلك بقوله : [ لا رضاع إلا ما فتق الأمعاء ] وكان في الثدي قبل الفطام فهذه ثلاثة أوصاف للرضاع المحرم ومعلوم أن رضاع الشيخ الكبير عار من الثلاثة
 قالوا : وأصرح من هذا حديث ابن عباس : [ لا رضاع إلا ما كان في الحولين ]
 قالوا : وأكده أيضا حديث ابن مسعود : [ لا يحرم من الرضاعة إلا ما أنبت اللحم وأنشز العظم ] ورضاع الكبير لا ينبت لحما ولا ينشز عظما
 قالوا : ولو كان رضاع الكبير محرما لما قال النبي صلى الله عليه و سلم لعائشة – وقد تغير وجهه وكره دخول أخيها من الرضاعة عليها لما رآه كبيرا : – [ انظرن من إخوانكن ] فلو حرم رضاع الكبير لم يكن فرق بينه وبين الصغير ولما كره ذلك وقال : انظرن من إخوانكن ثم قال : فإنما الرضاعة من المجاعة وتحت هذا من المعنى خشية أن يكون قد ارتضع في غير زمن الرضاع وهو زمن المجاعة فلا ينشر الحرمة فلا يكون أخا
 قالوا : وأما حديث سهلة في رضاع سالم فهذا كان في أول الهجرة لأن قصته كانت عقيب نزول قوله تعالى : { ادعوهم لآبائهم } [ الأحزاب : 5 ] وهي نزلت في أول الهجرة
 وأما أحاديث اشتراط الصغر وأن يكون في الثدي قبل الفطام فهي من رواية ابن عباس وأبي هريرة وابن عباس إنما قدم المدينة قبل الفتح وأبو هريرة إنما أسلم عام فتح خيبر بلا شك كلاهما قدم المدينة بعد قصة سالم في رضاعه من امرأة أبي حذيفة
 قال المثبتون للتحريم برضاع الشيوخ :
பாலூட்டுதல் என்ற தலைப்பில் விபரங்களைத் தரும் இப்னுல் கையும் அவர்கள்
 ولنذكر مناظرة أصحاب الحولين والقائلين برضاع الكبير فإنهما طرفان وسائر الأقوال متقاربة
இது குறித்து இரண்டு கருத்துக்கள் உள்ளன. இரண்டு வயதுக்குள் பாலூட்டினால் தான் தாய் என்ற உறவு ஏற்படும் என்ற கருத்திலும் பலர் உள்ளனர். அதற்கு மேற்பட்ட வயதில் பாலூட்டினாலும் தாய் என்ற உறவு ஏற்படும் என்ற கருத்திலும் சிலர் உள்ளனர். ஒவ்வொரு தரப்பினரும் வைக்கும் வாதங்களையும் மறுப்புக்களையும் நாம் கூறுகிறோம்.
என்று இப்னுல் கையும் முதல் பாராவில் கூறுகிறார்.
قال أصحاب الحولين :
இரண்டு வருடங்களுக்குள் பாலூட்டினால் தான் தாய் என்ற உறவு ஏற்படும் என்ற கருத்துடையவர்கள் சொல்லும் வாதங்கள் இவை தான்.
என்று அடுத்த பாராவில் சொல்லி விட்டு அவர்கள் கூறுகின்ற ஆறு வாதங்களை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக் காட்டுகிறார். அவற்றில் ஒரு வாதம் தான் இஸ்மாயீல் ஸலபி இருட்டடிப்பு செய்து எடுத்துக் காட்டிய வரி.
இதில் இப்னுல் கையும் யாரையும் ஆதரிக்கவும் இல்லை. யாருக்கு மறுப்பாகவும் ஒன்றும் இதில் சொல்லவில்லை.
ஸஹ்லா பெரியவருக்கு பாலூட்டியுள்ளாரே என்ற வாதத்துக்குப் பதில் சொல்லும் போது இது ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டது, பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்ற பதிலை முதல் கருத்தில் உள்ளவர்கள்  சொல்கின்றனர். அதற்காகத் தான் ஹிஜ்ரி ஆரம்பத்தில் இது நடந்தது என்கின்றனர்.
இதன் பின்னர் இப்னுல் கையும் அவர்கள் قال المثبتون للتحريم برضاع الشيوخ : என்று எதிர்த் தரப்பினர் சொல்லும் வாதங்களை இதன் பின்னர் பட்டியலிடுகிறார்.
இப்னுல் கையும் பெயரில் இவர் செய்த தில்லுமுல்லுகள் இவை.
இப்னுல் கையும் அவர்களின் மேற்கோள் காட்டியதில் அவர் செய்த தில்லுமுல்லுகளைத் தான் இங்கே காட்டியுள்ளோம்.
ஹிஜ்ரி முதல் வருடம் இது நடந்ததற்கு இது ஆதாரமாகுமா என்பதை இனிமேல் தான் விளக்கவுள்ளோம். அப்போது இவருக்கும் ஆய்வுக்கும் கடுகளவு கூட சம்மந்தமில்லை என்பது மேலும் தெளிவாகும்.
இதன் தொடர்ச்சி அடுத்த இதழில் காணலாம். இன்ஷா அல்லாஹ்.
இஸ்மாயீல் ஸலபியின் ஆக்கத்தை பார்வையிட இங்கு க்லிக் செய்யவும்.