அல்லாஹ்வின் மாபெரும் அருளால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்முனை மற்றும் சாயந்தமருது கிளைகள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம் 21.09.2013 சனிக்கிழமை காலை 08:30 மணிமுதல் 03:30 மணிவரை கல்முனை கிளை தஃவா சென்டரில் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பெண்களும் உட்பட 83 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.
இந் நிகழ்வில் இலங்கை ராணுவம், விசேட அதிரடிப்படையினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இரத்ததானத்தில் கலந்துகொண்ட படையினருககு யார் இந்த முஹம்மத்(ஸல்) எனும் சிங்கள நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்