ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை தங்களது தஃவா பணியில் முழு மூச்சாக களம் இறங்கி உள்ளது.
இதன் முதற்கட்டமாக தெருமுனை பிரச்சார நிகழ்சிகளையும் ஆரம்பித்து சிறப்புற செய்துவருகிறது. சாய்ந்தமருது மக்கள் மத்தியில் காணப்படுகின்ற கொள்கை குழப்பங்கள், கொள்கை முரண்பாடுகள், மற்றும் கொள்கை விளக்கங்கள் உட்பட இஸ்லாத்தை மக்கள் மத்தியில் நூதனமாகவும், அறிவுபூர்வமாகவும் விளக்கி வருகின்றது.
இதில் முதலாவது நிகழ்ச்சியாக கடந்த 08.02.2013 ம் (வெள்ளிக்கிழமை) திகதி அஸர் தொழுகையை தொடர்ந்து சகோதரர் ஜப்பார் ஆசிரியர் அவர்களால் தெருமுனையில் உரை நிகழ்த்தப் பட்டது.
இதில் நாம் ஏன் தனித்து விளங்குகிறோம்? எது சத்தியக் கொள்கை? என்பது பற்றி மக்களுக்கு விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்!
இது முஸ்லிம் சகோதரர்கள் உட்பட முஸ்லிம் அல்லாத சகோதரர்களும் கேட்டு பயன் அடைந்தனர்.