Blogger Widgets

Monday, July 8, 2013

தேசிய ஷூரா சபை ஏன்? விளக்கப் பொதுக்கூட்டம்

எம்மை எதிர் நோக்கி வரும் ரமழானை வரவேற்கும் முகமாகவும், முஸ்லிம் சமூக அறிவு ஜீவிகளின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் முகமாக ஒரு கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் ஒன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சாய்ந்தமருது கிளையால் கடந்த 05.07.2013 வெள்ளிக்கிழமை மஃரிபிற்கு பிறகு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந் நிகழ்வில் ரமழானின் நோக்கம் என்ன? என்ற தலைப்பில் சகோதரர் ரஸான் D.I.Sc அவர்கள் உரையாற்றினார்கள்.


தேசிய ஷூரா சபை ஏன்? எதற்கு? இதன் உண்மை நிலை என்ன? இதைப்பற்றிய ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு என்ன? என்பதைப்பற்றி தெளிவான விளக்கம் சகோதரர் ரஸ்மின் M.I.Sc அவர்களால் அளிக்கப்பட்டது.






இதில் பல சகோதர சகோதரிகளும் கலந்து பயன்பெற்றனர்.

எதிர்பாராத விதமாக மழை பெய்த காரணத்தால் நிகழ்ச்சி இஷா தொழுகை வரை தாமதமானாலும் திட்டமிட்டபடி கூட்டம் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!