SLTJ & TNTJ மீது அவதூறு பரப்பும் பொது பல சேனாவுக்கு எதிராக SLTJ யின் பத்திரிக்கையாளர் மாநாடு இன்று மாலை 04-00 மணிக்கு கொழும்பு நிபோன் மண்டபத்தில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.
தமிழ்நாட்டில் “நாம் தமிழர், மற்றும் மதிமுக, பொதுவுடமை கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களினால் இலங்கை புத்த பிட்சுகள் தாக்கப்பட்டது உலகறிந்த உண்மையாக இருக்கும் போது,
புத்த பிட்சுகளை தாக்கியது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டர்கள் என்றும் இதற்கு இலங்கையில் இருந்து செய்திகளை வழங்குவது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் என்றும் TNTJ & SLTJ பற்றி இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் பொது பல சேனா (பொய் பல சேனா) வின் செயலாளர் ஞானசார ஒரு வர்ணிக்கப்பட்ட பொய்யை அவிழ்த்து விட்டு இலங்கையில் செயல்படும் SLTJ யை தடை செய்ய வேண்டும் என்றும் பேசினார்.
இதனை இலங்கையின் மீடியாக்கள் இன்று செய்தியாக வெளியிட்டன. இது தொடர்பில் விளக்கமளிக்கவும், பொது பல சேனா என்ற இனவாத அமைப்பின் இனத் துவேஷ நடவடிக்கைகளை தோலுரித்துக் காட்டவும் நாளை இன்ஷா அல்லாஹ் SLTJ யின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கொழும்பில் நடை பெறவிருக்கின்றது.
பொது பல சேனா – அனைத்து சக்திகளும் பொறுந்திய அல்லாஹ்வை இறைவனாக ஏற்றிருக்கும் ஏகத்துவ வாதிகளைப் பொறுத்த வரை தூசுக்கு சமானமானது என்பதையும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்துகின்றோம்.
அல்லாஹ்வே அனைத்துக்கும் போதுமானவன் – அல்ஹம்துலில்லாஹ்.