Blogger Widgets

Monday, July 8, 2013

சூனியம் தொடர்பான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாயந்தமருது கிளையின் ஏற்பாட்டால் கடந்த 06.07.2013 சனிக்கிழமை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் எனும் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி மாளிகைக்காடு அல்-ஹூசைன் பாடசலையில் நடாத்தப்பட்டது.

இந் நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்ட விதத்தில் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது தவ்ஹீத் ஜமாஅத் அதிகமதிகம் விமர்சனத்துக்குள்ளாகும் ஒரு விடயம்தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் என்ற நிலையும், சூனியம் தொடர்பான நமது நிலைபாடும்தான். இது தொடர்பாக ஐயந்திறிபர மக்களுக்கு விளக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சூனியம் தொடர்பாகவும் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் தொடர்பாக நாம் சொல்லும் கருத்துக்கு மாற்றமான நிலைபாட்டிலுள்ளோர் எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்ற ஓர் அனுமதியை மனமுவந்து நாமாக முன்வந்து வழங்கினோம்.

வழமையாக கேள்வி பதில் நிகழச்சிகளில் டோகன்-அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு அதனடிப்படையில் கேள்வி கேட்க அனுமதிக்கப்டுவர். ஒருவர் தலா ஒரு கேள்வி கேட்க மட்டுமே அவகாசம் அளிக்கப்படும். ஆனால் நாம் இதிலும் வித்தியாசமாகவே நடந்து கொண்டோம்

வழக்கமாக வழங்கப்படும் எந்த டோகனும் வழங்கப்படாது. ஒருவர் தனக்கு சந்தேகம் தீரும் வர எத்தனை கேள்வியும் கேட்க முடியும் என்று நாம் அறிவிப்பு செய்திருந்தோம்.

கிட்டத்தட்ட இந் நிகழ்வை நாம் Open Debate ஆகவே அமைத்திருந்தோம்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தவ்ஹீத் ஜமாஅத்தின் மேற்படி நிலைபாட்டை யாரெல்லாம் எதிர்க்கிரார்களோ, யாரெல்லாம் மாற்றுக் கருத்தில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு முழு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும், அவர்களுக்கு இந்த செய்தி எத்திவைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மாற்றுக்கருத்திலுள்ள மவ்லவிகள் உட்பட பல சகோதரர்களுக்கு வீடுவீடாக சென்று அழைப்பிதழ் அளித்து அழைத்தோம்.



சூனியமான ஞான சூனியங்கள்

TNTJ, SLTJ போன்ற அமைப்புகள் முஃதஸிலாக்கள், வழிகெட்டவர்கள், ஹதீஸ்களை மறுக்கிறார்கள். இவர்கள் பீ.ஜெயை தக்லீத் செய்கிறார்கள். என்று வெளியே கூப்பாடு போட்டவர்களையெல்லாம் கூப்பிட்டு உங்கெளுக்காகவே நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம். கலந்து கொண்டு நாங்கள் தவறான கருத்தில் இருந்தால் அதை நிரூபித்துவிட்டுப் போங்கள் என்று சொன்னால், அழைப்பிதழ் வழங்கப்பட்ட 97 சதவீதத்துக்கு மேற்பட்டோர் தலைவைத்தும் கூட படுக்கவில்லை! (இதற்கு மவ்லவிமார்களும் விதிவிலக்கில்லை)

இவர்கள் எந்தளவுக்கு கொள்கையில் உறுதியாக உள்ளனர் என்பதும், இவர்களது விமர்சனத்தில் இவர்கள் எந்தளவுக்கு நேர்மையானவர்கள் என்பதற்கும் இது ஒரு மிகப் பெரிய சான்றாகும்.

பிற்பகல் 4:30 மணிக்கு ஆரம்பிக்கப்பட இருந்த நிகழ்ச்சி மழை காரணமாக சற்று தாமதமாக ஆரம்பிக்கப்பட்து.

இந் நிகழச்சியில் சகோதரர் ரஸ்மின் M.I.Sc, சகோதரர் ரஸான் D.I.Sc ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுக் கருத்துள்ள சகோதரர்களின் கேள்விக்கு தெளிவான முறையில் விளக்கமளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்