சாய்ந்தமருது வழக்கு தீர்வு..
அசத்தியத்திற்கு கிடைத்த சாவுமணி
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகளில் ஒன்றான சாய்ந்தமருது கிளையானது மக்கள் வெள்ளப்பெருக்கத்தின் காரணமாக விஸ்தரிப்புடன் கூடிய தவ்வா பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நோக்குடன் கடந்த ஆண்டு காலப்பகுதியில் அப்பகுதியில் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் இடமொன்றினை பெற்று தவ்வா வேலையை முன்னெடுக்க திட்டமிட்டுரிந்தது. இதன் வளர்ச்சிப் போக்கை சகித்துக் கொள்ள முடியாத சிறு குழுவினர் அதிகாரிகளை தூண்டிவிட்டும், ரவுடிகளை ஏவிவிட்டும் குறித்த இவ்ஜமாஅத்தின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்ற குறுகிய வட்ட சிந்தனையுடன் பல்வேறு முட்டுக்கட்டைகளையும், இடர்பாடுகளையும், ரவுடித்தனங்களையும் கட்டவிழ்த்து விட்டு சில காலங்களாக பொலீஸ் மற்றும் அதிகாரிகளினூடாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிமன்றில் வழக்குகள் தொடுக்கப்பட்டு இதுவரை காலமும் தடைப்பட்டு இருந்தது.
கடந்த 30.06.2014 ல், றமழான் மாத ஆரம்ப நோன்புகாலம் என்று கூட பாராமல் காடையர்களை ஏவிவிட்டு அமல்களால் சிறப்பிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்ட குறித்த இடத்தினை உடைத்து நொறுக்கி சுக்குநூராக்கி இறை கோபத்தை தூண்டக்கூடிய வகையிலும், முஸ்லிம்களின் சாபத்தை பெற்றுக் கொள்ளும் சேவைகளையும் மும்முறமாக செய்தார்கள்.
இருந்தாலும் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் என்பதை மனதிற் கொண்டு செயற்படுத்தியவர்களாகவும், ஜமாஅத்தின் வரையறைகளையும் கட்டுப்கோப்புக்களையும் கருத்திற் கொண்டும் இறையுதவியை எதிர்பார்த்தவர்களாக பொறுமை காத்தோம். பொறுமைக்கும், சமுதாய நல்வழிகாட்டல்களுக்கும் இறையுதவி எப்போதும் கிடைக்கும் என்பதில் ஐயம் கொள்ளவில்லை.
எமக்கெதிராக அணிதிரண்ட இவர்கள் பல்வேறு கட்டங்களில் அவர்களுக்குள் புதைந்துகிடக்கும் முரண்பாடுகளை களைந்து ஒன்றுபட்டார்கள். அல்லாஹ்வுடைய ஒளியை ஊதி அனைக்க உலகமே திரண்டாலும் முடியாது என்ற நமபிக்கையை மனதில் புதைத்தவர்களாக அவர்களின் சதிக்கெதிராக பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்தோம்.
இறுதியாக பல்வேறு கடட்ங்களாக நீதிமன்றானது வழக்கை முடித்துக் கொள்வதில் சஞ்சலம் காட்டினாலும் இறையுதவி எப்போதும் சத்தியத்திற்கு கிடைத்தே தீரும் என்பதில் இன்னும் உறுதியானோம் அல்ஹம்துலில்லாஹ். அதைத் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக வழக்கின் போக்கை எதிரிகள் திசை மாற்றினாலும் சத்தியத்திற்கே இறுதி வெற்றி என்பதை அல்லாஹ் படம் பிடித்து புரிய வைத்தான்.
இவர்கள் தொழக்கூடாது என்ற எம்மீதான குற்றச்சாட்டுக்கான வழக்கு இன்றிலிருந்து நமக்கு சாதகமாக ”இவர்கள் தொழலாம், தொழுவது இவர்களின் உரிமை, தடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது” என்று நீதிமன்று உத்தரவிட்டது அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்.
சத்தியத்துக்கு வெற்றியை தந்த அல்லாஹ்வை புகழ்வதோடு, சரியான தீர்வழித்த நீதிமன்றுக்கு ஜமாஅத் சார்பாக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்று காடையர்களை தூண்டிிவிட்டு உடைக்கப்பட்ட படம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.