ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை சார்பாக கடந்த 2013.04.19ம் திகதியன்று பி.ப. 04.30 மணி முதல் மாலை 06.00 மணிவரை சாய்ந்தமருது கல்யாண வீதியில் உள்ள மயோன் பள்ளிக்கு முன்பாக தெருமுனைப் பிரச்சாரத்தை நடாத்தியது. மூடப் பழக்கவழக்கங்களுக்கும், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்ற செயற்பாடுகளும் மலிந்து காணப் படுகின்ற இப்பகுதியில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெற்றிகரமாகமும், விவேகமாகவும் அம்மக்களுக்கு சத்தியத்தை புரியவைக்கப்பட்டது. இதை சகோதரர். அஜ்மீர் (அமீனி) அவர்கள் இஸ்லாத்தை புரிந்து கொள்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் பல ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். குறிப்பாக : அவ்லியாக்கள் என்போர் யார்? இவர்களை எவ்வாறு இனம் காண்பது? அவ்லியாக்களிடம் பிராத்திப்பது பற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு! சூனியம் வைத்தல் அதை நம்புதல் போன்றன பகிரங்க இணைவைத்தல் போன்ற விடயங்கள் இவ்விடத்தில் பேசப் பட்டன.