SLTJ யின் செயலாளர் சகோ. அப்துல் ராஸிக் அவர்கள் சிறப்புரையாற்றினார். வழமையான தொடர் சொற்பொழிவாக அல்லாமல் இலங்கை முஸ்லீம்களின் மூல வரலாறு மற்றும் இலங்கையில் முஸ்லீம்கள் தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுவதன் பின்னனி, பொது பல சேனா என்கிற இனவாத குழுவினரின் இஸ்லாமியர்களுக்கு எதிரான சதி மற்றும் இலங்கையில் உள்ள முஸ்லீம் இயக்கங்களின் கையாலாகாத்தனம், இயக்க தலைவர்களின் உண்மை முகம் ஆகியவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
சுமார் எழுநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வு நான்கு மணி நேரம் ஆவணப்படங்களை கொண்டு நடத்தப்பட்டது. எவ்வித சளிப்புமில்லாமல் அனைவரும் ஆச்சரியம் கலந்த சிந்தனையோடு நிகழ்ச்சியை அவதானித்தனை காணக்கிடைத்தது.
இலங்கையில் மிக நீண்ட வரலாற்று பின்னனி கொண்ட சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம் தான் என்பதையும், இலங்கையின் முன்னேற்றத்திற்காக இந்த சமுதாயம் செய்த தியாகத்தையும் ஆதாரங்களோடு பட்டியலிட்டு, நாம் இலங்கையில் ஏன் எதிர்க்கப்படுகிறோம் யாரால் எதிர்க்கப்படுகிறோம் எதிர்ப்பவரகள் யாரால் தூண்டி விடப்படுகிறார்கள் என்பதையும் துள்ளியமாக சுட்டிக்காட்டினார்.
முஸ்லீம்களுக்கு எதிராக பல வருடங்களுக்கு முன்னதாகவே முடுக்கி விடப்பட்டிருக்கும் சதி வலையில் இலங்கையை பொறுத்தவரையில் பொது பல சேனா ஒரு பகடைக்காயே அன்றி வேறில்லை. என்பதற்கான புகைப்பட ஆதாரங்களும், இந்த சதியின் பின்ன்னியில் இயக்கம் கொடுப்பது அமெரிக்கா தான் என்பதை அடுக்கடுக்கான சான்றுகளோடு விளக்கியது வந்திருந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முன் எப்போதையும் விட இந்த நிகழ்ச்சிக்கு மற்ற அமைப்பை சார்ந்தவர்கள் அதிக அளவு கலந்து கொண்டனர் என்பது கூடுதல் தகவல்.
இலங்கை முஸ்லீம்கள் அன்று முதல் இன்று வரை சந்தித்து வரும் பிரச்சனைகளை சிறு மேற்கோள்களாக இருந்தாலும் நுனுக்கமாக விளக்கி படிப்படியாக இன்றைய சூழல் வரை கொண்டு வந்து நாம் இந்த சதிகாரர்களை எதிர்கொள்ள ஒரே வழி குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என உறுதியாக நம்பி அதன் வழியில் நின்று போராடுவது தான். அது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு மட்டுமே சாத்தியம் என இன்றைய முஸ்லீம்களின் இந்த நிலையை மாற்றும் தீர்வையும் சொல்லி தனது உரையை முடித்தது வந்திருந்த எல்லா தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளும் படியாகவே இருந்தது.
குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டியில் நடந்த இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் குவைத் மண்டலம் சார்பாக சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறுதியாக இலங்கை நியாஸ் நானா அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இலங்கை திக்வௌயை சேர்ந்த குவைத் இக்ரா இஸ்லாமிய சங்கத்தின் அழைப்பாளர் சகோதரர் ஹாஸிக் மரைக்கார் இந்நிகழ்ச்சியை பற்றி கூறும்போது… “இது இலங்கை முஸ்லிம்க்களின் இன்றைய நிலையை பரிபூரணமாக எடுத்துரைக்க கூடிய நிகழ்ச்சி, இன்னும் சொல்லப்போனால் இது இந்த அளவோடு நின்று விடாமல் குறுந்தகடாக இந்த நிகழ்ச்சிக்கு வராத மக்களுக்கும் சென்றடைய வேண்டும்” (இது மிச்சம்..மிச்சம்..மிச்சம்..பெஸ்ட் நிகழ்ச்சி)
இலங்கை பரகஹதெனியவை சேர்ந்த குவைத் ஜம்மியத்துல் அன்ஸார் சுன்னத்தில் முஹம்மதிய்யா அமைப்பினரான சகோதரர் அய்யால் நஷுருதீன் அவர்கள் கூறுகையில் இது போன்ற நிகழ்ச்சி இதுவரை நடந்ததே இல்லை. இந்த நிகழ்ச்சி வரவேற்கப்பட வேண்டிய நிகழ்ச்சி. இதில் காட்டப்பட்ட ஆவணப்படங்களில் ஒன்றிரண்டை தவிர மற்ற அனைத்தும் இப்போது தான் பார்க்கிறேன் என்றார்.
இலங்கை குருத்தலாவையை சேர்ந்த சகோதரர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் கூறுகையில் “இன்றைய சூழலில் மிக மிக அத்தியாவசியமான நிகழ்ச்சி எங்களைப் பற்றி எங்களுக்கே உணர்த்திய நிகழ்ச்சி” தவ்ஹீத் ஜமாத்தை தவிர வேறு யாரும் இந்த முயற்சியை எடுக்கவில்லை. இது போன்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும். அதேபோல கடந்த வாரம் நடந்த சிங்கள மொழி இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனக்கு பெரும் சந்தோஷத்தை அளித்தது.
கண்டி முஹம்மது இக்பால் அவர்கள் நம்மிடம் கூறுகையில் “எனக்கு தவ்ஹீத் ஜமாத்தை பற்றி தவறான தகவல்கள் சொல்லப்பட்டிருந்தது.. இப்போது தான் உண்மை என்னவென்று தெறிந்து கொண்டேன்.” இங்கு காட்டப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியை இலங்கை முழுவதும் கொண்டு போகவேண்டும் என தவ்ஹீத் ஜமாத்திற்கு கோரிக்கை வைக்கிறேன் என்றார்.
இலங்கை அனுராதபுரத்தை சேர்ந்த சகோதரர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள் கூறுகையில்.. இன்று நான் நிறைய பாடம் படித்துக் கொண்டேன். இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக இப்படி ஒரு சதி இருப்பதை தெளிவாக புரிந்து கொண்டேன்.
சகோதரர் நவ்ஃபர் அவர்கள் கூறுகையில் “நாங்களே இதுவரை கண்டிராத பல அறிய புகைப்படங்கள் வீடியோ ஆதாரங்களை காட்டி அழகான முறையில் தெளிவுபடுத்தி இருக்கின்றீர்கள் இதன் மூலம் குவைத்தில் உள்ள இலங்கை முஸ்லீம்கள் நிச்சயம் தெளிவடைவார்கள். இனி வரும் காலங்களில் TNTJ வின் அனைத்து பணிகளிலும் பங்கெடுக்க முடிவு செய்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் இன்று அரங்கத்தில் தொண்டரணியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது.
இலங்கை கொழும்பை சேர்ந்த சகோதரர் முஹம்மது நவாஸ் நம்மிடம் கூறுகையில் இது ஒரு ஆச்சரியமான நிகழ்ச்சி இவ்வளவு தைரியமாக இது போன்ற செய்திகளை வெளி உலகத்திற்கு கொண்டு வந்த தவ்ஹீத் ஜமாத்திற்கு நன்றியை தெறிவித்துக் கொள்கிறேன். இனி என்னால் முடிந்த அளவிற்கு இந்த ஜமாத்திற்கு நான் உதவியாக இருப்பேன் இன்ஷா அல்லாஹ்.
தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண் கூறுகையில் ”நான் ஏதோ இலங்கையை சார்ந்தவர்களுக்கான நிகழ்ச்சி தானே கொஞ்ச நேரம் பார்த்து விட்டு போய்விடலாம் என நினைத்தேன். நான்கு மணி நேரம் எங்களை கட்டி போட்டு விட்டது இந்த நிகழ்ச்சி, இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் வேறல்ல நம்முடைய சொந்தங்கள் அவர்களுடைய உரிமைக்காக நாமும் நம்மால் முடிந்தவரை போராட வேண்டும் என உணர்த்திய நிகழ்ச்சி. அதுமட்டுமில்லாமல் முஸ்லிம்களுக்கு எதிரான உலகலாவிய சதியின் பின்னனியை விளக்கிய இந்த நிகழ்ச்சி உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சி களத்தொகுப்பு : கூத்தாநல்லூர் ஜின்னா
புகைப்படங்கள் : மேலப்பாளையம் ஹுசைன்