அப்துல் வதூத் மற்றும் சிலரும் கூட்டிணைந்து தவ்ஹீத் ஜமாஅத் மீது பல்வேறு அவதூறுகளைப் பரப்புவதை முழு நேரத் தொழிலாகச் செய்து வருகின்றனர்.
கொள்கையற்ற இந்தக் கும்பல் தொடர்ந்தும் அவதுhறுகளை மேடைபோட்டுப் பரப்பி, தனிமனித விமர்சினம் செய்து வருவதனால், இவர்களின் அறியாமையையும் கயமைத் தனத்தையும், இவர்களின் மறுபக்கம் அறியாத அப்பாவி மக்களுக்குத் தேலுரித்துக்காட்ட வேண்டிய நிலையை இவர்களே ஏற்படுத்திவிட்டனர்.
لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَنْ ظُلِمَ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا )النساء : 148
அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 04:148)
அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் இந்த அனுமதியின் அடிப்படையில் நாம் இந்த மறுப்பை வெளியிடுகின்றோம். இதை நியாய உணர்வுடன் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
ஆவணப்படங்களுடன் சொற்பளிவு ஆற்றுபவர்கள்:
சகோ. அப்துல் ராஸிக் B.com, சகோ: ரஸ்மின் MISc, சகோ: ஹபீல் ஸலபி
அப்துந் நாசிர்-TNTJ, அப்பாஸ் அலி-TNTJ, சையது இப்ராஹீம்-TNTJ