Blogger Widgets

Monday, January 12, 2015

projector bayan

அஸ்ஸலாமு அலைக்கும் 

SLTJ சாய்ந்தமருது கிளையினால் இன்று (2015.01.12) சாய்ந்தமருது எபெக்ஸ் பேக்கரிக்கு அருகாமையில் ஏற்பாடு செய்யப்பட்ட புரஜெக்டர் பயான் நிகழ்ச்சி மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

சகோதரர் பர்சான் அவர்களினால் குடும்பவியல் மாநாட்டில் ஆக்ரோசமான முறையில் உரையாற்றப்பட்ட சீதனமும் சொத்துப் பங்கீடும் என்ற தலைப்பிலேயே  திரையிடப்பட்டது.

சமூகத்தில் முறையற்ற வகையில்  சொத்துப்பங்கீடுகளை பங்கீடு செய்வதனால் ஏற்படும் இம்மை,மறுமை விளைவுகள்,
சீதனம் அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம்,
ஆண் மக்கள் குருட்டுத்தனமாய்
கேட்கும் பிச்சை காசினால் வாழ்விழந்து தவிக்கும் 
கண்ணிப் பெண்கள்..
இவ்வாறு பர்சான் அவர்களின் ஆக்ரோஷமான பேச்சு எம்மை நின்ற இடத்திலே கட்டிப்போட்டு விட்டது..
அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் பயானை தடுத்து நிறுத்த அசத்தியவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட போலி முயற்சியும்  அல்லாஹ்வின் உதவியினால் தவிடு பொடியாக்கப்படது.
அல்லாஹு அக்பர்.