Blogger Widgets

Monday, July 1, 2013

சத்தியத்தை சாகடிக்கும் சாக்கடைகளின் சங்கமம்

இலங்கையில் தவ்ஹீத் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எழுச்சி பெற்று, வளர்ந்து வந்தது. இதற்கு துவக்க காலத்தில் முக்கிய பங்களிப்பாற்றிய அப்துல் ஹமீத் பக்ரி என்ற தர்வீஸ் ஹாஜியார் அவர்களின் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத உறுதியான நிலைப்பாடுதான் காரணமாக அமைந்தது. எனினும், இன்று அவரின் பெயரைப் பயன்படுத்தி, தவ்ஹீத் முகவரியுடன் சுன்னாவை சாகடித்து, பித்அத்திற்குப் பள்ளிகட்டி, கிணறு வெட்டி, வட்டிக்கு விளம்பரம் செய்து  வயிறு வளர்க்கும்  கூட்டத்தினர் தவ்ஹீதை விட்டுத் தடம் புரண்டு, வழிகேடர்களோடு இணைந்து, சாக்கடைகளுடன் சங்கமித்து உண்மையைப் பொய்யுடன் கலந்து வழிகேட்டில் விழுந்துவிட்டனர். 


உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடுதான். (அல்குர்ஆன் 21:18)
இவர்கள் ஷிர்க்,குஃப்ர், பித்அத், தர்கா, தரீக்கா, தப்லீக்,ஜமாஅதே இஸ்லாமி, இக்வான்,இப்லீஸ் என்று அனைவருடனும் கள்ளக் கூட்டும் சமரசமும் செய்து கொண்ட சந்தர்ப்பவாதிகள்; என்பதற்கு இவர்களின் அண்மைய மாநாடும் ஆதாரமாக அமைந்துவிட்டது.ஏனெனில் தவ்ஹீதின் விரோதிகளான அகார் முஹம்மது, ரிஸ்வி முப்தி போன்றோர் இவர்களின் மேடையை அலங்கரித்தனர்.
குண்டர்களின் குறும்பு

பறகஹதெனியவில் உள்ள அத்தக்பீர் புத்தக நிலையத்தில் சத்தியக் கருத்துக்களை மட்டும் தாங்கிய நூல்களும் குறுந்தகடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.இதனை இவர்களின் மாநாட்டின் போது இரண்டு நாட்கள் மூடிவிடச் செய்யுமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.இலங்கை சட்டப்படி இது மனித உரிமை மீறல்.எனவே இந்த அயோக்கித்தனத்தை அங்கீகரிக்கக் கூடாது என்று மாவத்தகம காவல் துறை JASM கும்பலின் மனுவை குப்பையில் போட்டுவிட்டு அத்தக்பீர் புத்தக நிலையத்தை திறக்கப் பணித்ததோடு, இரண்டு நாட்களும் பாதுகாப்பு வழங்கியது. ஒரு சிறிய புத்தக நிலையத்திற்கு இந்தஅசத்தியக் கும்பல் அஞ்சுவது ஏன்?
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.
(அல்குர்ஆன் 9:32)
தவ்ஹீதை விட்டு தடம் புரண்ட தடயங்கள் 

இன்று இந்தக் கும்பலால்; இலங்கைத் தவ்ஹீத் என்பது வழிகெட்ட மத்ஹபு போல் ஆக்கப்பட்டு  நீர்த்துப் போய் விட்டது என்பதால் இவர்களை அடையாளம் காட்ட வேண்டிய காலத்தின் தேவை ஏற்பட்டுவிட்டது.
கொள்கை கெட்ட இவர்களால் தவ்ஹீதுக்குச் செய்யப்படும் இந்த துரோகம் பற்றி விமர்சிக்கும் போது, தவ்ஹீத் வாதிகளுக்கு மத்தியில் இது தேவைதானா என்ற ஒரு கேள்வி இன்று பலர் மத்தியிலும் எழுகிறது. நிதி நிறுவனங்கள் அறிஞர் பீஜேவை தரக்குறைவா விமர்சித்த போது, மவ்னம் காத்த இந்த “நடுநிலைவாதிகள்” இப்போது கேள்வி எழுப்புவது இவர்களின் “நடுநிலையை” அப்பட்டமாக அம்பலமாக்குகிறது.
தவ்ஹீத் என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு, தவ்ஹீதுக்கு எதிரான அனைத்துக்கும் துணைபோகும் அந்த துரோகம் உடைத்து எறியப்பட வேண்டியதும், தவ்ஹீத் பெயர் தாங்கிகளாக இருக்கும் போலிகள் இனம் காட்டப்படவேண்டியதும் மிகவும் அவசியமே. அதன் அடிப்படையிலேயே தடம் புரண்டிருக்கும் அந்தத் தடயங்களை  இங்கு ஆதாரங்களோடு சமர்ப்பிக்கின்றோம். பித்அத்தை ஒழிப்பதாக சீன் காட்டி, அறபிகளை ஏமாற்றிக் காசு கறக்கும் இவர்கள்தான் பித்அத்தின் ஷிர்க்கின் நண்பர்களாக இருக்கின்றனர்.
இன்று அறபுப் பணத்தை வைத்து ஆட்டம் போடும் நிறுவனங்களில் ஏகத்துவக் கொள்கை பின்தள்ளப்பட்டுள்ளதையும் கொள்கைக் கலப்பு ஏற்பட்டு, தில்லுமுல்லுகள், துஷ்ப்பிரயோகங்கள் நடைபெறுவதையும்  ஆதாரத்துடன்  விமர்சினம் செய்துவருகின்றோம். அதற்காக சத்தியத்தை நேசிக்கும் யாரும் புண்படவேண்டியதுமில்லை, புண்படவும் கூடாது. நாம் இவர்களை விமர்சிப்பதற்குப் பல நூறு நியாயமான காரணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றையே இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கின்றோம். தவ்ஹீத் பணி தவ்ஹீத் பணியாகவே தொடர வேண்டும் என்பதுதான் எமது அவாவாகும்.அதற்காகவே இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்திற்குக் கொண்டுவருகின்றோம்.இதன் மூலம் தவ்ஹீத் பிரசாரத்தில் அதிரடி மாற்றத்தையும் வேண்டி நிற்கின்றோம்.
இலங்கைத் தவ்ஹீதுக்கு முழு உரிமை கோரும் கொள்கையற்ற இஸ்மாயீல் சலபி என்பாருக்கும் அவர் கூலிக்கு மாறடிக்கும் துயுளுஆ கும்பலுக்கும்  அந்த கும்பலின் தானைத் தலைவர் அபூபக்கர்  சித்தீக் மதனி என்பவருக்கும்  தவ்ஹீத் என்பது பணம் பண்ணுவதற்கான வழிமுறையே தவிர வேறு இல்லை.
பலவேசம் போடும் இவர்கள், உள்ளார தப்லீக் ஜமாஅதாகவும் ஜமாஅதே இஸ்லாமியாகவும்  இக்வானுல் முஸ்லிமீனாகவும் உள்ளதால் அதை வெளிப்படையாகச் சொன்னால், உண்மையான தவ்ஹீத்வாதிகளால் புறக்கணிக்கப்பட்டு, சவூதியிலிருந்து சல்லி அடிக்க முடியாது என்பதற்காக ஓரிரண்டு தவ்ஹீத் எனத் தோன்றும் கட்டுரைகளை வெளியிட்டுவிட்டு, பயான் என்ற போர்வையில் அரைத்த மாவையே அரைத்து,  சவூதியை ஏமாற்றிக் கொண்டு, வழிகெட்ட இயக்கங்களின் சிந்தனைகளை விதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளில் ஒரு தரமான ஆய்வைக் கூட இவர்களிடமிருந்து இலங்கை மக்களால் காண முடியவில்லை.
ஒரு தர்ஜமா(?) அதாவது தரமா உள்ளதா என்றால், மெஸ்மரிசம், டெலிபதி என்று இஸ்லாமிய சிந்தனையிலிருந்து திருடிய, பச்சை ஷிர்க்கான கருத்துக்களைத் திணித்துள்ளனர். அதிலுள்ள திருகுதாளங்கள் பற்றிய விமர்சினங்களை அடுத்தடுத்து வெளியிடுவோம்.
கொள்கையற்ற இயக்க ஆதரவு:

அண்மையில் இப்படி வேறு ஒப்பாரி வைக்கிறார் இஸ்மாயில்: “என்னை இஹ்வானி, ஜமாஅதே இஸ்லாமி எனப் பட்டம்  சூட்டி எனது கட்டுரைகளைத் தவ்ஹீத் மக்கள் வாசிப்பதைத் தடுப்பதற்கு சதி செய்தனர்…”
நாம் ஒன்றும் சதி செய்பவர்கள் அல்லர்.சதிக்குப் பெயர் போன இவர்தான் இப்படி நயவஞ்சக நாடகமாடுகின்றனர்.

ஜமாஅதே இஸ்லாமி, இக்வான்களின் கொள்கைகளை ஆதரித்து உ.உதயத்தில் எஎழுதினால், ஆதரிக்குமாறு மக்களுக்கு அறிவுரை கூறினால் இஸ்மாயில் சல்லாபியை எவ்வாறு தவ்ஹீத்வாதி என்று கூற முடியும். யார் சில ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்று இஸ்மாயில் சலபி எழுதுகிறாரோ, அவர்களின் பத்திரிகைகளை மக்கள் வாங்கி ஆதரிக்க வேண்டும் என்று  கூறினால் அதன் பொருள் என்ன? இது நயவஞ்கனின் நாடகமா இல்லையா? இதே இவரின் இரட்டை முகம்.

(முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் உண்மை உதயம், அல் ஹஸனாத் போன்ற சமயம் சார்ந்த சஞ்சிகைகள் இருக்கின்றன. எங்கள் தேசம், மீள்பார்வை, முஸ்லிம் குரல், நவமணி, சத்தியக்குரல் என்பன போன்ற பத்திரிகைகள் இருக்கின்றன. இவற்றை இலங்கை முஸ்லிம்கள் ஊக்குவித்து வளர்க்க முயல வேண்டும். (உண்மை உதயம் மே 2005, பக்கம் 03) இது நயவஞ்சகத்தனமா இல்லையா?
3494 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَجِدُونَ النَّاسَ مَعَادِنَ خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الْإِسْلَامِ إِذَا فَقِهُوا وَتَجِدُونَ خَيْرَ النَّاسِ فِي هَذَا الشَّأْنِ أَشَدَّهُمْ لَهُ كَرَاهِيَةً وَتَجِدُونَ شَرَّ النَّاسِ ذَا الْوَجْهَيْنِ الَّذِي يَأْتِي هَؤُلَاءِ بِوَجْهٍ وَيَأْتِي هَؤُلَاءِ بِوَجْهٍ رواه البخاري
மேலும், மக்களிலேயே (மிகத்) தீயவனாக இரு முகங்கள் கொண்டவனை நீங்கள் காண்பீர்கள். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் செல்வான். அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (3494)
தல்கஸ்பிடி என்ற கிராமத்தில்  துயுளுஆ கிளையில் IIRO செயலாளர் துணையோடு இக்வான்களை பள்ளியை விட்டு நீக்கிவிட்டு, அதே இக்வானை சேர்ந்த ஒருவருக்கு ASSLAFIYYA BOOK  CENTER ல் பதவி வழங்கினால் இது முனாபிக் தனமில்லையா?
இவர் ஆதரிக்க முனையும் நவமணி ஒரு ஷீஆ சார்பான செய்திப் பத்திரிகை.  சத்தியக்குரல் ஒரு தரமற்ற,சில போது  மத்ஹபை ஆதரித்து தவ்ஹீத் முகவரியில் உலாவும் இக்வான்களின் கட்டுரைகளையும் தாங்கி வரும் ஒரு பத்திரிகை.
அல்ஹஸனாத் ஜமாஅதே இஸ்லாமியின் சஞ்சிகைää ஒவ்வொரு இதழிலும் தவ்ஹீத் பிரசாரத்தை ஏதோ ஒரு வகையில் தரக்குறைவாக விமர்சித்தே கட்டுரை வெளியிடும்.
மீள்பார்வை இக்வான்களின் பத்திரிகை. பித்அத்தையும் மத்ஹப்பையும் வளர்க்கவே அது பக்கங்கள் பலதை செலவிடுகிறது. மத்ஹப் சாக்கடைகளை இஸ்லாமிய சட்டப் பாரம்பரியம், அதை ஏகத்துவ வாதிகள் அழிக்க முனைகிறார்கள். இவர்களின் மத்ஹப் எதிர்ப்புக்குப் பின்னால் யூத கிறிஸ்தவ சதி இருக்குமோ என்று கூட அல்குர்ஆன் சுன்னாப் பிரசாரத்தைக் கொச்சைப்படுத்தி, ஆபாசமும் அரக்கத்தனமும் நிறைந்த மத்ஹபை மேன்மைப்படுத்தி, பகிரங்கமாக எழுதிய மீள்பார்வையை இலங்கை முஸ்லிம்கள் ஊக்குவித்து வளர்க்க வேண்டுமாம். இதுதான் ஹதீஸைப் பாதுகாக்கும் இலட்சணமோ! அற்ப புகழுக்காகவும் காசுக்காகவும் இஸ்லாத்திற்கே வேட்டு வைக்கும் வேடர்கள் இவர்கள் என்பது புரிகிறதா?
அது மாத்திரம் இல்லை, இவர்கள் உண்மையாகவே, அல்லாஹ்வுக்காகவே தவ்ஹீத் பேசுவோராக இருந்தால்  மேற்கண்ட பத்திரிகைகளை வாங்குங்கள் என்று கூற முடியாது. ஏனெனில், 20 ரகஅத் தராவீஹ்,  கூட்டு துஆ  இன்ன பிற பித்அத்களை நாம் எதிர்ப்பது போலவே இந்த கொள்கையற்ற  கூட்டமும் எதிர்ப்பதாக காட்டிக் கொள்கிறது. ஆனால், இஸ்மாயீல் சலபி ஆதரிக்கும் மேற்கண்ட பத்திரிகைகள் இந்த விஷயத்தில் சத்தியத்திற்கு எதிரான நிலையில் உள்ளன. இவற்றைத்தான் வாங்கி ஆதரிக்க வேண்டும் என்கிறர்.
தவ்ஹீத் வாதிகளைக் கொச்சைப் படுத்திப் பேசுவதில் வல்லவரான அகார் முஹ்ம்மத் என்பார் தராவீஹ் குறித்து அல்ஹஸ்னாத்தில் எழுதிய பிறகும்,  தரீக்காக்களை ஆதரித்து எழுதிய பிறகும், ஈரானில் நடந்த ஷீஆயிஸ ஆட்சி மாற்றத்தை இஸ்லாமியப் புரட்சி எனக் கூறி, ஷியாயிஸத்தை இலங்கையில் புகுத்திய ஒர் இயக்கத்தின் பத்திரிகையான அல்ஹஸனாத்தை வாங்கிப் படியுங்கள் என்று இவரால் எப்படி எழுத முடிந்தது? கடுகளவு தவ்ஹீதை நேசிப்பவனால் கூட இவ்வாறு எழுத முடியாதல்லவா!? குப்பைகளை வாங்கவும் வளர்க்கவும் துண்டுபவன்தான் தவ்ஹீத்வாதியா?
அது போல், மீள்பார்வை எனும் பத்திரிகையின் நிலை என்ன? அவர்கள் எழுதியவற்றை சேம்பிளாகத் தருகின்றோம்.(உதவி கேட்டு சமூக சேவை நிறுவனங்களிடம் போனால் அவர்கள் நாங்கள் மாடு தருவோம்  பள்ளி கட்டுவோம்  கிணறு தோண்டுவோம் என்ற பாலை வனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால்  வட்டி முறை வங்கிகளிடம் வீட்டுக் கடன் திட்டங்கள் காணப்படுகின்றன. அவற்றின் வட்டி வீதமும் குறைவானது தான்)(மீள்பார்வை  -இதழ்-114 ப-16)
அதாவது இவர்களின் திட்டங்களை மட்டம் தட்டி விமர்சிப்பதுடன் வட்டிக்குக் கடன் வாங்கி, வீடு கட்ட மக்களைத் தூண்டி, விஷத்தை விதைக்கும்  மீள்பார்வையை அனைவரும் வாங்க வேண்டும் என்கிறார்.
சில ஹதீஸ்களை மறுத்தவர் என்று இவர் விமர்சனம் செய்த அபுல் அஃலா மவ்தூதியின் கொள்கையையும் ஜமாஅதே இஸ்லாமி கொள்கைகளையும் பரப்பும் அல்ஹஸனாத் பத்திரிகையை வாங்கி ஊக்குவிக்க வேண்டுமாம்!  முஹம்மத் அல் கஸ்ஸாலி முஹம்மத் அப்துஹு ஆகியோரும் ஆதாரப் பூர்வமான சில ஹதீஸ்களை மறுத்துள்ளனர் என்று இவர்தான் எழுதுகிறார். ஆனால், இவர்களின் கொள்கைகளைத் தாங்கி வரும் மீள்பார்வை இதழை வாங்கி, ஆதரவு கொடுக்குமாறு நயவஞ்சகத்தனமாக எழுதுகிறார்.
இதுமட்டுமா? தீய கொள்கையுடையவர்களை  எதிர்ப்பதற்குப் பதிலாக எப்படியெல்லாம் இவர்கள்  ஒட்டி உறவாடி ஆதரித்து வருகின்றனர் என்பதற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்.
அகார் முகம்மது என்பவர் ஜமாஅதே இஸ்லாமியின்  பிரசாரகர். ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்கள் என்ற பட்டியலில் இஸ்மாயீல் சலபி  இடம் பெறச் செய்த அபுல் அஃலா மவ்தூதியின் கருத்தைப்  பரப்பிக் கொண்டிருப்பவர். ஜமாஅதே இஸ்லாமியின் கொள்கையை அதாவது ஸலபிக் கொள்கைக்கு எதிரான கொள்கையைப் பரப்புவதற்காக  அகார் முகம்மது ஓர் இணைய தளத்தை ஆரம்பித்தார். தவறான கொள்கைக்காக  ஒர் இணைய தளம் துவங்கப்படுகிறது என்றால், உண்மையான கொள்கைவாதியின் கடமை என்ன? அது பற்றி மக்கள் விழிப்படையும் வகையில்ä, அதன் தீய கொள்கைகளை எச்சரித்து, தெளிவுபடுத்த வேண்டும். இந்த அளவுக்கு தீவிரம் காட்ட சக்தியில்லை என்றால், கண்டு கொள்ளாமல் மௌனமாகவாவது இருக்க வேண்டும். ஆனால், அந்த இணைய தளத்துக்கு இஸ்மாயில்  சல்லாபி வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். (…தமிழ் உலகுக்கு நன்கு பரிச்சயமான தலை சிறந்த எழுத்தாளரும்  பேச்சாளருமான அஷ்ஷெய்க் ஏ.சி அகார் முஹம்மத் (நளீமி) அவர்களது ஆழமான  இந்த அறிவுப்பணி தமிழ்  சிங்கள உலகில் எழுச்சிமிக்க இஸ்லாமிய சிந்தனையை ஏற்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன். எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி.)

ஹதீஸைப் பாதுகாக்க கொந்தளிக்கும் இலட்சணம்  இதிலிருந்து தெரிகிறதா?
வழிகெட்ட அமைப்புகள் தவறாக இணைய தளத்தைப் பயன்படுத்தி  வரும் நிலையில், அகார் முகம்மதுவின் இணைய தளம் வழிகெட்ட இணைய தளம் அல்ல என்று இவரால் எப்படிச் சொல்ல முடிந்தது? இஸ்லாமிய தாகத்தைத் தணிக்க இந்த இணைய தளம் துவங்கப்பட்டிருப்பதாக இவரால் எப்படி எழுத முடிந்தது? தவறான கொள்கையுடைய இணைய தளம் எழுச்சிமிக்க இஸ்லாமியச் சிந்தனையை எப்படி ஏற்படுத்தும்? தீய கொள்கையைப் பிரசாரம் செய்பவர் எப்படி தலை சிறந்தவராக இவரது கண்களுக்குத் தென்படுகிறார்.தவறான கொள்கை என்பதற்காக இவர்கள் கொதித்து எழக் கூடியவர்கள் அல்லர்.அரபு நாட்டுப் பணக் கையாடல் தொடர்பான நமது விமர்சனத்தின் பாதிப்பினால் தான் மறுப்புக் கட்டுரை வரைந்துள்ளார் என்பதற்கு இதுவும் தக்க சான்றாகும்.
நடிக்கும் நயவஞ்சகனைத்தவிர வேறு யாராலும் இப்படி எழுத முடியுமா? இப்போது சொல்லுங்கள்: இவர்கள் பீஜேவை தரக்குறைவாக விமர்சிப்பதற்கு,
இவர்கள் கொள்கையை விற்றுவிட்டு அரபு நாட்டுப் பணத்துக்கு அலைவதை பீஜே அம்பலப்படுத்தி விட்டார் என்ற பீஜே மீதுள்ள கடுப்புக் காரணமா? கொள்கை காரணமா? என்பதை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்! இவர்களிடம் கொள்கை இருந்தால் தானே கொள்கைக்காக கோபம் வர முடியும். அதுதான் இவர்களிடம் இல்லையே! தீனாருக்கும் திர்ஹத்திற்கும் அடிமையானவர்கள் நஷ்டமடைந்துவிட்டார்கள்.(புகாரி)
வட்டிக்கும் மோசடிக்கும் விளம்பரம்

வரையறுக்கப்பட்ட சிலின்கோ பொரொஃபிட் ஷெயரிங் இன்வெஸ்ட்மெண்ட் கோப்பரேஷன் என்ற பெயரில் மக்கள் பணத்தை மார்க்கத்தின் பெயரால் சுருட்டும் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் லாபம் என்று கூறிக் கொண்டாலும் வட்டியும்  மோசடியின் மறு பெயரான ஷேர் என்பதும் தான் இவர்களின் திட்டம். இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தான் என்று கள்ள ஃபத்வா ஒன்று கொடுக்கப்பட்டது. ஃபத்வா கொடுத்தவர்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை. இந்த ஃபத்வா குழுவில் அபூபக்கர் சித்தீக் மதனியும் நவ்ஃபர் மவ்லவியும் இருந்தார்கள். பீஜேவுக்கு எதிராக பரகஹதெனியப் பள்ளியில் அரசியல் வாதி கடன் வாங்கும் அளவு நாகரிகம் தவறிப் பேசும் இவர், வட்டி பற்றியும் மோசடி பற்றியும் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? ஜம்இய்யத்துல் உலமாப் பதவிக்காகவா?அல்லது வட்டியைக் கண்டித்த அல்குர்ஆனை நீங்கள் பாதுகாக்கம் நவீன வழி முறையா?
யூதர்களின் பொருளாதாரத் திட்டமான வட்டி முறையில் இலங்கை முஸ்லிம்கள் பணம் போட வேண்டும் என்பதற்காக இஸ்மாயீல் சலபி உண்மை உதயம் இதழில் கடைசிப்  பக்கத்தில் முழுப் பக்க விளம்பரம்  கொடுத்தார். பீஜேவுடைய மாமிசத்தை உண்ணும் இவர்களுக்கு ரோசம்,சூடு,சொரணை இருந்தால் இதற்கு மட்டுமாவது பதில் சொல்லட்டும். மார்க்கத்துக்கு முரணான இந்தச் செயலை ஹலால் என்று ஃப்த்வா கொடுத்ததுமட்டுமல்லாமல் மக்கள் போட்ட பணத்தைச் சுருட்டியும் உள்ளனர். சுருட்டப்பட்ட பணம் 80 கோடி ரூபாய். பணம்  போட்ட அப்பாவிகள் கொந்தளித்துப்  போய் கடந்த ஒக்டோபர் 23 ஆம் தேதி வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்குப் பின் ஊர்வலமாகத் திரண்டு  சென்று, ஜம்மியதுல் உலமா சபை செய்துள்ள மோசடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டட்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இது சுடர் ஒளி பத்திரிகையில் 24 ஆம் தேதி வெளியாகியுள்ளது. விளம்பரம் செய்த சலபிக்கு  எவ்வளவு பங்கு? ஃப்த்வா  கொடுத்த சித்தீக் மதனிக்கு எவ்வளவு பங்கு? என்று மக்கள் கேட்கிறார்கள். இதற்கும் JASM வகையறாக்கள் பதில் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நாளை பறகஹதெனியாவிலும் ஆர்பாட்டம் நடைபெறலாம்.
தவறான கொள்கையை பீஜே கூறுகிறார். அதைப் பொறுக்க முடியாமல் தான் பொங்கி எழுந்தோம் என நாடகமாடும் JASM கூட்டம்  மத்ஹபில் தான் மோட்சம் உண்டு எனக் கூறி மீள்பார்வை, குர்ஆன் – ஹதீஸிலிருந்து மக்களை அப்புறப்படுத்த முயல்கிறதே அதை வாங்கிப் படியுங்கள் என்று சல்லாபியால் துணிந்து எழுத முடிந்தது எப்படி? இதற்கு ஆதாரமாக 2003 ஜனவரி-பிப்ரவரி இதழை எடுத்துப் பாருங்கள். அதில் எப்படி நச்சுக் கருத்துக்களைப் பக்குவமாகப் புகுத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்! அதன் தலையங்கத்தில் (இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த போது,  அல்அஸ்ஹர் பலகலைக்கழக மாணவர்கள் மத்தியில் காகத்தின் மாமிசம் ஹலாலா? ஹராமா? என்ற கருத்து வேறுபாட்டில் கலகம் நடந்து கொன்டிருந்ததாகக் கூறுவர்.இப்படி JASM கூட்டம் பொய்மை உதயத்தில் எழுதியுள்ளது. இது எங்கேயோ கேட்ட குரலாகத் தெரிகிறதா? விரல் அசைத்தல், நெஞ்சில் கைகட்டுதல்,  கூட்டு துஆ மறுத்தல்  பித் அத்தைக் கண்டித்தல் என்று நம் தவ்ஹீத் பயணத்தைத் தொடர்ந்த போது, இக்வான்களும்  ஜமாஅதே இஸ்லாமியும் ஒலித்த அதே குரல் தான் இப்போது தவ்ஹீத் வேசிதாரி இஸ்மாயில் சலபியால் ஒலிக்கப்படுகிறது.
அதாவது போலி ஒற்றுமைக்காக  இது போன்ற சட்ட சர்ச்சை கூடாதாம். இதனால் பிளவு ஏற்படுமாம். இப்படி வாதிடுபவர் தவ்ஹீத்வாதியா? இரண்டாம் உலகப் போர் நடந்தால், காகம் ஹலாலா? ஹராமா? என்று ஆய்வு செய்யக் கூடாதாம். ஹலால் ஹராம் பிரச்சினை சின்ன விஷயமாம். இவ்வாறு, இவர்களின் கொள்கையே இக்வான், ஜமாஅதே இஸ்லாமி கொள்கையாக இருக்கும் போது, அதை வாசிக்கும் படி பரிந்துரை செய்வதில் என்ன ஆச்சரியம்?
அசத்தியத்திற்கு ஆதரவு நிலை

அதே தலையங்கத்தில் மீள்பார்வைக் கொள்கையை மீண்டும் வாந்தி எடுப்பதைப் பாருங்கள்! முஸ்லிம்கள் தயம்மும் செய்வது எப்படி என்று சர்ச்சை செய்து தீர்மானம் எடுத்தார்களாம். ஆனால், அவர்கள் சர்ச்சைப்பட்டு முடிவதற்குள் அவர்களின் சொந்த பூமி ஆக்ரமிக்கப்பட்டு தயம்மம் செய்ய சொந்த மண்ணில்லாது போனது என்பர் என்று மடமை மிகுந்த, தவ்ஹீதுக்கு எதிரான இக்கருத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றுவது தெரிகிறதா? யுத்த களத்திலும் தொழச் சொன்ன மார்க்கத்தில் யுத்தம் நடக்கும்போது தயம்மும் பற்றி விவாதிப்பதை ஒரு முஸ்லிம் குறை காண்பானா? நான் இபாதத் விஷயத்தில் சோம்பேறி என்று ஒத்துக் கொள்ளும் இஸ்மாயீலுக்கு இதுவெல்லாம் சர்வ சாதாரண விடயம்தானே.
எவ்வளவு முக்கியமான நேரம் என்றாலும் மற்ற காரியங்களைச் செயயக் கூடாது என்று அறிவிலிதான் கூறுவான். யுத்தம் நடக்கும் போது சாப்பிட மாட்டார்களா? மலஜலம் கழிக்க மாட்டார்களா? தலை வலித்தால் மாத்திரை போட மாட்டார்களா? அதை விட முக்கியமான வணக்கத்தையும் அதைச் செய்யும் முறை பற்றியும் பேசக்கூடாது என்று நச்சுக் கருத்தை விதைக்கும், வட்டிக்கு முழுப் பக்க விளம்பரம் செய்யும்  உண்மை உதயத்தை வாசிப்பதே பாவம். பத்தோடு பதினொன்றாக குப்பைத் தொட்டியில் தூக்கிப்  போடுங்கள். இந்த மடமை வாதத்தை தோலுரித்தால் கட்டுரை இன்னும் நீண்டு விடும். (இந்த மடமை வாதம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிந்திட ஒற்றுமைக் கோஷமும் ஓறிறைக் கொள்கையும் என்ற பயான் CD ஐப் பார்த்துக் கொள்க)
இவர்களின் சிந்தனை முழுவதும் தவ்ஹீதுக்கு எதிரான போக்கே நிறைந்து காணப்படுகிறது.  தவ்ஹீத் கொள்கைப் பிடிப்பு காரணமாக இவர்கள் விமர்சனம் செய்யவில்லை. சவூதி சல்லி விஷயமாக பீஜே விமர்சித்த கோபம் தான் காரணம் என்பதற்கு மற்றொரு உதாரணத்தைப் பாருங்கள்! கமிஷனோ, ஆதாயமோ கிடைக்கிறது என்பதற்காக அரபு நாட்டிலிருந்து பணம் வாங்கி, பள்ளிவாசல் கட்டிவிட்டு போகட்டும். ஆனால், அவ்வாறு கட்டப்படும் பள்ளிவாசல் குர்ஆன் – ஹதீஸ் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தான் உண்மையான தவ்ஹீத்வாதி நினைப்பான். தவ்ஹீதுக்கு எதிரான காரியங்கள் நடக்கும் பள்ளிகளுக்கு அரபுகளிடம் பணம் வாங்கிக்கொடுக்க மாட்டான். இவர்கள் கட்டிய பல பள்ளிகளில் தவ்ஹீத்வாதிகளுக்கு தீங்கிழைக்கப்படுகிறது. இவர்களின் இழிசெயலை அல்லாஹ் இவ்வாறு கண்டிக்கின்றான். (தீங்கிழைப்பதற்காகவும் (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும் நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும் இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகரிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் ‘நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். ‘அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும் அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (குர்ஆன: 07:107-109) இவ்வசனங்கள் இவர்கள் பற்றிப் பேசுவது போல் உள்ளதல்லவா?
தவ்ஹீத்வாதிகளைக் கேவலப்படுத்துதி பித்வாதிகளைக் கண்ணியப்படுத்துதல்
தவ்ஹீதுக்க்காக முதலில் கட்டிக் கொடுத்த பள்ளிவாசல் இது தான்.
ஏத்தாளை என்ற கிராமத்தில் இவர்களால் தவ்ஹீதுக்காக ஒரு பள்ளிவாசல் அரபு நாட்டு சல்லியில் கட்டிக் கொடுக்கப்பட்டது. தவ்ஹீதுக்காக ஒரு பள்ளி இருக்கும் ஏத்தாளையில்,அந்தப் பள்ளிக்கு சில மீட்டர் தொலைவில் அதைவிட பெரிய பள்ளிவாசல்  தப்லீக் இயக்கத்தவர்களுக்காக இவர்களால் கட்டிக் கொடுக்கப்பட்டது.
ஒரு கோடி ரூபாவில் பிரமாண்டமான அந்த இரண்டு மாடி தப்லீக் பள்ளி திறப்பு விழாவில் அபூபக்ர் ஸித்தீக் மதனி குத்பா செய்துவிட்டு, தப்லீக் இமாமுக்குத் தொழுவிக்கக் கொடுத்தார். அவர் தொழுவித்துவிட்டு, கூட்டு துஆ ஓதி, பித்அத்தை அரங்கேற்றினார். இதற்கு, இவரும் இஸ்மாயில் உட்பட, கொள்கை கெட்ட இவர் கூலிப்படைப் பரிவாரர்களும் அங்கீகாரம் அளித்தனர்.
தவ்ஹீத் கொள்கைக்காக பாடுபடுபவரின் செயல் இதுவா? இது போன்ற பள்ளிக்கு உதவலாமா? என்று இஸ்மாயீல் சல்லாபி தனது எஜமானரிடம் கேட்டாரா? கூட்டு துஆ ஓதும் போது, தானும் தடுக்காமல் தனது எஜமானிடம் ஏன் பார்த்துக் கொண்டிருந்தீர் என்று இஸ்மாயீல் சலபி கேட்டகவில்லை. தவ்ஹீதுக்க்காக நாமே கட்டிய பள்ளிவாசல் இருக்கும் போது, அதற்கு எதிராக அதைவிட பெரிய பள்ளியைக் கட்டிக்கொடுப்பது முறையா? என்றாவது உண்மை உதயத்தில் எழுதினாரா? அதுவும் இல்லை.இவர்தான் ஹதீஸைப் பாதுகாக்கப் போகிறாராம்.

தவ்ஹீதுக்கு எதிராக தப்லீக் ஜமாஅத்திற்குக் கட்டிகொடுத்த அதைவிட இரண்டு மாடிப் பெரிய பள்ளிவாசல் இது தான். இது ஓர் உதாரணம் மட்டுமே. இவர்கள் கட்டிக் கொடுத்துள்ள பல பள்ளிகளில் தவ்ஹீதுக்கு எதிரான அத்தனை அனாச்சாரங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுன்னா முஹம்மதியா லேபலை வைத்துக்கொண்டு சுன்னாவுக்கு எதிராக அனைத்து அராஜகங்களையும் அரங்கேற்றுகிறீர்களே!
இறைத் தன்மைக்கு சொந்தம் கொண்டாடல்
இவர்களின் மற்றொரு சூப்பர் தவ்ஹீத் கொள்கையைப் பாருங்கள்.
ஹிஜ்ரி 1414ல் (சவுதியிலிருந்து) சல்லி அடிப்பதற்காக திருக்குர்ஆன் தமிழாக்கம் ஒன்று வெளியிடப்பட்டது. அதைச் சரி பார்த்தவர்கள் என்ற பட்டியலில் முதல் பெயராக அஷ்ஷைக் நாகூர் பிச்சை முகம்மது அபூபக்கர் சித்தீக் என்று உள்ளது.
அந்த தமிழாக்கத்தில் (அளிக்கப்பட்டுள்ள) நற்சான்றைப் பாருங்கள்.

இம்மொழி பெயர்ப்பு சரியான கொள்கையைச் சார்ந்துள்ளதாகவும் வார்த்தைப் பிரயோகத் தவறுகளில் இருந்தும் நீக்கம் பெற்றதாகவும் அமைந்துள்ளது என்று (கூறப்பட்டுள்ளது,)
வார்த்தைப் பிரயோகத்தில் உள்ள தவறுகளில் இருந்தும் நீக்கம் பெற்றுள்ளது என்று எந்த மனிதனுடைய எழுத்துக்காவது நற்சான்று தர முடியுமா? அப்படியானால் இவர்கள் அல்லாஹ்வா? மனிதன் எழுதிய இப்படி ஒரு நூல் உலகில் இருக்க முடியுமா?
இன்னும் சொல்லப் போனால் தமிழில் வெளியான அனைத்து தமிழாக்கத்திலும் கடைசித் தரத்தில் உள்ளது தான்  (இவர்கள் கூட்டிணைந்து வெளியிட்ட இந்தத்) தர்ஜூமா. குர்ஆனை ஒருவரும் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக கடும் உழைப்பு செய்து மொழி பெயர்த்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் உள்ள நூலுக்குத் தான் இந்த பில்டப். (அந்தத்) தமிழாக்கம் எது என்கிறீர்களா? (அது இக்பால் மதனியும் இவர்களும் சேர்ந்து வெளியிட்ட தர்ஜமாதான்.)
மனிதனுக்கு அல்லாஹ்வுடைய தன்மை அளிப்பது இவர்களுக்குச் சர்வ சாதாரணமானது. அதற்கேற்பவும் நிறைய கை வரிசையைக் காட்டியுள்ளனர்.
அஷ்ஷ_அரா அத்தியாயத்தின் 16வது வசனத்தைப் பாருங்கள். (பக்கம் 368)

ஆகவே நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று நிச்சயமாக நாங்கள் அகிலத்தாரின்

இரட்சகனாகிய தூதராவோம்

என்று நீங்களிருவரும் கூறுங்கள்.
இரட்சகனின் தூதர் என்றால் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் என்று பொருள். இது தான் சரியான மொழி பெயர்ப்பு. இரட்சகனாகிய தூதர்கள் என்றால் தூதர்களே இரட்சகனாகவும் உள்ளனர் என்று பொருள்.
மூஸா நபியையும் ஹாரூன் நபியையும் இறைவன் என்று சித்தரிக்கும் வகையில் மொழி பெயர்த்துள்ளனரே, நாம் ஹதீஸை மறுப்பதாக வரிந்து கட்டி வாதாடிய சலபியின் கண்ணுக்கு படியளப்பவரின் அத்வைதம் மட்டும் மறைந்து விட்டதா? தனது BCயில் பிழையிருந்தால் வரிந்து கட்டிக் கொண்டு திருத்தும் இவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை மொழி பெயர்த்ததில் தவறை இதுவரை திருத்தம் செய்யவில்லை.குர்ஆனுக்கே வேட்டுவைத்த வேடதாரிகள் ஹதீஸைப் பாதுகாக்கப் புறப்பட்டுவிட்டார்களாம்! குர்ஆனுக்கு மட்டுமா இவர்கள் ஹதீஸைப் பாதுகாக்கும் இலட்சணத்தைப் பாருங்கள்.
ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்போர் யார்?

ஆல்குர்ஆனுக்கு முரண்படுபவை ஹதீஸ்கள் அல்ல.அவை கட்டுக்கதைகளே என்று நாம் கூறும் போது வானத்துக்கும் பூமிக்கும் குதித்த இந்தக் கும்பல் வேண்டுமென்றே புஹாரியில் இடம்பெறும் ஹதீஸன் நீண்ட வாக்கியத்தையே விட்டு விட்டு மொழிபெயர்த்துள்ளது.
ஒரு வாக்கியமே நடுவில் உருவி எடுக்கப்படுவது தற்செயலாக நடந்திருக்குமா? மீள வெளியிட்டதிலும் இருட்டடிப்பே செய்துவிட்டு ஹதீஸை நாம் மறுப்பதாக ஒப்பாரி வைக்கின்றனர்.இது இரால் மண்டையில் பீயை வைத்துக் கொண்டு நாற்றத்தை வேறு எங்கே தேடுவதைப் போன்றல்லவா இருக்கிறது.

அரபியையும் இவர்களது தமிழாக்கத்தையும் பாருங்கள்.
روة بن مسعود لقريش  وقال عروة بن مسعود لقريش : يا قوم واللّه لقد وفدت إلى كسرى وقيصر والملوك فما رأيت ملكا يعظمه أصحابه ما يعظمأصحاب محمد محمدا صلى الله عليه وسلم ، واللّه ما يحدون النظر إليه تعظيما له ، وما تنخم نخامة إلا وقعت في كف رجل منهم فيدلك بها وجهه وصدره ، وإذا توضأ كادوا يقتتلون على وضوئه . انتهى (1) كتاب التوحيد- د. صالح بن فوزان الفوزان -ص- 76
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காரி உமிழ்ந்தால் அது கீழே விழாது. யாருடைய கையிலாவது தான் விழும். (அதாவது அந்தச் சளி கீழே விழாமல் ஒவ்வொருவரும் கையை நீட்டி அதைப் பெற முயல்வார்களாம்) யார் கையில் அது விழுந்ததோ அதன் மூலம் தமது முகத்திலும் நெஞ்சிலும் அதைத் தடவிக் கொள்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளுச் செய்தால் அந்தத் தண்ணீருக்காக சண்டையிட்டுக் கொள்வார்கள்.
இவ்வளவு பெரிய வாக்கியம் கவனக் குறைவால் விடுபட்டிருக்க முடியுமா? இது புகாரியில் இருந்தாலும் இது சரியானதாக இருக்க முடியாது என்று அவர்களின் ஆழ் மனது இவர்களுக்குக் கூறியதால் இவர்கள் இந்த இருட்டடிப்புச் செய்திருந்தால் இவர்களின் உள் மனதும் குர் ஆனுக்கு முரணான ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்பதைத் தானே சொல்கிறது
குர்ஆனுக்கு மாற்றமான இது போன்ற செய்திகள் புகாரியில் இருந்தாலும் இதை நம்பக் கூடாது என்று இவர்களின் மனசாட்சி கூறியிருக்கிறது. நாங்கள் வெளிப்படையாக இதை எடுத்துக் காட்டி இச் செய்தி தவறு என்று கூறுவோம்.
இவர்கள் அதை மக்கள் காதுகளுக்குப் போகாமல் மறைக்க எண்ணுகின்றனர்.  ஆதாரப்பூர்வமான செய்தியில் அந்தச் செய்தியின் ஹைலைட்டாக இருக்கும் வாக்கியத்தை மறைத்து மோசடி செய்கின்றனர்.
இவர்கள் மறைத்தாலும் ரஹ்மத் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கத்தின் மூலம் இது மக்களை அடையுமே! அப்போது எதைப் போட்டு மூடுவார்கள்?
ஒரு வேளை யாராவது கேள்வி கேட்பார்கள். பதில் சொல்ல முடியாது என்று இந்த இருட்டடிப்பு நடந்திருந்தால் இதுவும் இவர்களின் பார்வையில் தவறானதே.
காபிர்கள் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வார்கள் என்று நான் குறிப்பிட்ட ஒரு செய்திக்காக வானத்துக்கும் பூமிக்கும் குதித்த இஸ்மாயில் சலபி. காபிருக்கு பதில் சொல்ல முடியாதே என்று இருட்டடிப்பு செய்தல் எங்ஙனம் சரியாகும்.
வண்டவாளம் இன்னும் வளரும் இன்ஷா அல்லாஹ்!